Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கை மற்றும் ஈரானுக்கிடையில் முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்து!

In இலங்கை
Updated: 16:11 GMT, May 16, 2018 | Published: 16:11 GMT, May 16, 2018 |
0 Comments
1145
This post was written by : Litharsan

ஈரான் ஜனாதிபதி ஹஸன் ரௌஹானியின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஈரானுக்கான இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டார். இந்த விஜயத்தின்போது இரு நாடுகளுக்குமிடையில் முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. அத்துடன் பொருளாதார கூட்டு ஆணைக்குழுவினை கூட்டுவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

ஈரானின், தெஹ்ரானிலுள்ள சாதாபாத் மாளிகையில் நடைபெற்ற இந்த சந்திப்பில் முக்கிய 5 விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

அந்தவகையில், சட்டவிரோதமாக போதை மருந்துகளை கடத்துவதற்கு எதிராக போராடுதல், சினிமா மற்றும் தொலைக்காட்சி துறை, ஈரானின் தரங்கள் மற்றும் தொழில்துறை ஆய்வு நிறுவகம் மற்றும் இலங்கை தரங்கள் நிறுவகம் ஆகியவற்றுக்கிடையிலான தரப்படுத்தல், அளவியல் மற்றும் பயிற்சி, கலாச்சார, விஞ்ஞான மற்றும் தொழினுட்ப ஒத்துழைப்பு அத்துடன் சுகாதாரம், மருத்துவ விஞ்ஞானம், மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்கள் தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டது.

மேலும் இலங்கை மற்றும் ஈரானுக்கு இடையிலான வர்த்தக உறவுகளில் கவனம் செலுத்தும் வகையில், பொருளாதார ஒத்துழைப்புக்கான கூட்டு ஆணைக்குழுவின் 12 ஆவது கூட்டத்தை இந்த வருடம் ஓகஸ்ட் மாதத்தில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

இதன்போது, பொருளாதார ஒத்துழைப்புக்கான கூட்டு ஆணைக்குழுவினை கூட்டுதலானது, சுற்றுலாத்துறை, விவசாயம், மீன்பிடி மற்றும் நீரியல் வளம், பண்ணை வளர்ப்பு ஆகியன உள்ளடங்கலான துறைகளில் வர்த்தகம், பொருளாதாரம் மற்றும் வியாபார ஒத்துழைப்பினையும், போக்குவரத்து மற்றும் உட்கட்டமைப்பு ஆகிய துறைகளில் முதலீட்டினையும் மேற்கொள்வதற்கும் ஏற்றுக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg