Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கை கிரிக்கெட் சபையின் புதிய அறிவிப்பு!

In கிாிக்கட்
Updated: 07:09 GMT, May 17, 2018 | Published: 07:09 GMT, May 17, 2018 |
0 Comments
1056
This post was written by : Puvanes

அண்மைக்காலமாக இலங்கை கிரிக்கெட் அணியானது தோல்விகளால் துவண்டுள்ள போதிலும் இலங்கை கிரிக்கெட் வாரியம் இந்த வருடத்தில் 14 மில்லியன்கள் இலாபம் ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள தகவல்களின்படி கடந்த வருடத்தினை விடவும் இவ்வருடம் கிரிக்கெட் வாரியத்தின் வருமானம் 33 மடங்கு அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இந்த இலாப வளர்ச்சிக்கு இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் வளர்ச்சித் திட்டங்களும், தூரநோக்கு அபிவிருத்து யுக்திகளுமே காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் இலாபம் அதிகரித்துள்ளதாக மட்டுமே இதுவரை தகவல் வெளியிட்டுள்ள இலங்கை கிரிக்கெட் வாரியம் இது தொடர்பான முழுவிபரங்களை வெளிப்படுத்தவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

2017களில் நடந்த சிம்பாவே, இந்தியா மற்றும் பங்களாதேஷ் தொடர்கள் இலங்கையில் நடந்ததன் காரணமாகவே இந்த இலாப வளர்ச்சி ஏற்பட்டுள்ளது எனக் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இலங்கை கிரிக்கெட் அணியானது தொடர் தோல்விகளையே சந்தித்து வருகின்றது. சுதந்திரக் கிண்ண முத்தரப்புப் தொடர் தோல்வி, இந்தியாவிற்கு எதிரான தொடரிலும், சிம்பாவேக்கு எதிரான தொடரையும் இலங்கை மோசமான முறையில் தோல்விகளைத் தழுவியிருந்தது என்பதும் சுட்டிக்காட்டப்படத்தக்க விடயமாகும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)