Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

‘காவிரி மேலாண்மை வாரியம்’ நிராகரிப்பு – வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு

In இந்தியா
Updated: 08:57 GMT, May 17, 2018 | Published: 08:57 GMT, May 17, 2018 |
0 Comments
1097
This post was written by : Litharsan

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பில் அமைக்கப்படும் அமைப்பிற்கு “காவிரி நீர் மேலாண்மை ஆணையம்” என பெயரிடப்பட்டுள்ளதாக மத்திய அரசின் திருத்தப்பட்ட வரைவு செயல் திட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவிரி நீர் பங்கீடு தொடர்பான வழக்கு விசாரணை இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது மத்திய அரசு தனது திருத்திய செயல்திட்ட அறிக்கையை மன்றில் சமர்ப்பித்தது.

அதில் காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான அமைப்புக்கு “காவிரி நீர் மேலாண்மை ஆணையம்” என பெயரிடப்பட்டுள்ளது. எனவே காவிரி மேலாண்மை வாரியம் என பெயரிட வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

அதேவேளை, கர்நாடக அரசு தரப்பில் இன்று 2 பக்க அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், மத்திய அரசின் வரைவு செயற்திட்டம் உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு உட்பட்டதாக இல்லையென்றும், மாநில அரசின் அதிகாரம் மற்றும் செயற்பாட்டில் தலையிடுவதாக உள்ளதாகவும் கூறியுள்ளது.

இதையடுத்து திருத்தப்பட்ட வரைவுச் செயற்திட்டம், உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு உட்பட்டுள்ளதா என ஆராய்ந்து தீர்ப்பு வழங்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளதுடன். திகதி குறிப்பிடப்படாமல் வழக்கை ஒத்திவைத்தது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg