Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அம்பியூலன்ஸ் வண்டி சாரதி தாக்கப்பட்டமையை கண்டித்து போராட்டம்

In இலங்கை
Updated: 08:59 GMT, May 17, 2018 | Published: 08:59 GMT, May 17, 2018 |
0 Comments
1042
This post was written by : Varatharajan Yuganthini

மன்னார்,பெரிய பண்டிவிருச்சான் பிரதேச வைத்தியசாலையின் அம்பியூலன்ஸ் வண்டி சாரதி ஒருவர் தாக்கப்பட்டமையை கண்டித்து இன்று (வியாழக்கிழமை) கண்டன போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்பாக இந்த கண்டன போராட்டம் மற்றும் பணிப்பகிஸ்கரிப்பு என்பன முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பெரிய பண்டிவிருச்சான் பிரதேச வைத்தியசாலையில் நீண்ட காலமாக அம்பியூலன்ஸ் வண்டி சாரதியாக கடமையாற்றும் ராஜேந்திரன் சற்குனராசா என்பவர் மீது கடந்த 14 ஆம் திகதி வைத்தியசாலை வளாகத்தில் வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தை கண்டித்து மன்னார் மாவட்ட அரச சுகாதார சேவைகள் சாரதிகள் சங்கம் மற்றும் சிறிலங்கா ஜனரஞ்சக சுகாதார சேவைகள் சங்கம் ஆகியவை இணைந்து ஒரு மணி நேர அடையாள பணிப்பகிஸ்கரிப்பையும், எதிர்ப்பையும் மேற்கொண்டனர்.

இதற்கமைய இன்று காலை 8 மணி தொடக்கம் 9 மணி வரையுமான சுமார் ஒரு மணித்தியாலம் இவர்கள் பணிபகிஸ்கரிப்பை மேற்கொண்டுள்ளனர்.

தாக்குதலுக்கு உள்ளான குறித்த சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றார்.

எனவே குறித்த அம்பியூலன்ஸ் வண்டி சாரதி மீது தாக்குதல்களை மேற்கொண்ட குறித்த நபர்கள் கைது செய்யப்பட வேண்டும் என போராட்டக்காரர்கள் கோரியுள்ளனர்.

மேலும்,அரச பணியாளர்களின் மரியாதை பேணப்பட வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)