Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கால்பந்து நட்சத்திரங்களின் உருவங்கள் பதித்த முகமூடிகள் விற்பனை

In உதைப்பந்தாட்டம்
Updated: 09:14 GMT, May 17, 2018 | Published: 09:14 GMT, May 17, 2018 |
0 Comments
1139
This post was written by : Varothayan

மெக்ஸிக்கோவின் பிரபல முகமூடி உற்பத்தி நிறுவனம் ஒன்று, கால்பந்து உலகின் பிரபல நட்சத்திரங்களின் உருத்தை ஒத்த முகமூடிகளைத் தயாரித்து விற்பனைக்கு விட்டுள்ளது.

இந்த பருவகாலத்தில், குறித்த முகமூடி விற்பனையினால் வருமானத்தை பெற முடியும் என அந்நிறுவனம் நம்புகின்றது.

பிரபல முகமூடி வடிமைப்பாளரான குருபோ ரெவ் தயாரிப்பில், இம்முறை உலகக் கிண்ணப் போட்டிகளில் விளையாடும் ஆர்ஜென்டீன கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்சி, போர்த்துக்கல்லின் கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் பிரேசிலின் நெய்மர் உள்ளிட்டவர்களும், கால்பந்து ஜாம்பவான்களான ஆர்ஜென்டீனாவின் டியாகோ மரடோனா மற்றும் பிரேசிலின் பீலே உள்ளிட்டவர்களின் முகமூடிகளும் விற்கப்படுகின்றன.

அத்துடன், மெக்ஸிக்கோவின் பிரபல வீரர்கள் சிலரது முகமூடிகளும் தயாரித்து விற்பனைக்கு விடப்பட்டுள்ளன.

குறித்த முகமூடிகள் மெக்ஸிக்கோவில் மட்டுமல்லாமல், ஸ்பெயின் பிரான்ஸ் மற்றும் ஐக்கிய அமெரிக்காவிலும் பரவலாக விற்கப்படுவதாக குருபோ ரெவ் தெரிவிக்கின்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg