Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மான் வேட்டை வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு

In இந்தியா
Updated: 09:28 GMT, May 17, 2018 | Published: 09:28 GMT, May 17, 2018 |
0 Comments
1075
This post was written by : Litharsan

பொலிவுட் நடிகர் சல்மான் கான் மீது தொடரப்பட்டுள்ள மான் வேட்டை வழக்கு எதிர்வரும் ஜூலை மாதம் 17 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஜோத்பூர் மாவட்ட நீதிமன்றம் இந்த உத்தரவை நேற்று (புதன்கிழமை) பிறப்பித்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள கன்கனி கிராமத்துக்கு 1998 ஆம் ஆண்டு படப்பிடிப்புக்காக சென்ற சல்மான் கான், அங்கு அரிய இன மான்களைச் சுட்டுக் கொன்றதாகக் கூறப்படுகிறது.

இதுதொடர்பான வழக்கை கடந்த ஜனவரி மாதம் விசாரித்த நீதவான் நீதிமன்றம் அவருக்கு 5 வருட சிறை தண்டனையை விதித்தது. எனினும், உரிமம் காலாவதியான துப்பாக்கியைப் பயன்படுத்திய வழக்கில் அவரை நீதிமன்றம் விடுவித்தது.

அதனைத் தொடர்ந்து, சிறையில் அடைக்கப்பட்ட சல்மானுக்கு பிணை வழங்கப்பட்டது. இதனிடையே, உரிமம் காலாவதியான துப்பாக்கியைப் பயன்படுத்திய வழக்கிலிருந்து சல்மான்கான் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து, ஜோத்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் ராஜஸ்தான் அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மனு, ஜோத்பூர் மாவட்ட நீதிபதி சந்தர் குமார் முன்பு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அப்போது, சல்மான் தரப்பில் ஆஜரான சட்டத்தரணி மான் வேட்டை வழக்கையும், துப்பாக்கி உரிமம் காலாவதியான வழக்கையும் இணைத்து விசாரிக்குமாறு கோரிக்கை விடுத்தார். இதனை அடுத்து இந்த வழக்கை ஜூலை 17 ஆம் திகதிக்கு நீதிபதி ஒத்திவைத்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg