Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அதர்வாவின் இரசிகர்கள் ஏமாற்றம்!

In சினிமா
Updated: 12:50 GMT, May 17, 2018 | Published: 12:50 GMT, May 17, 2018 |
0 Comments
1019
This post was written by : Anojkiyan

அதர்வா நடிப்பில் உருவாகியிருக்கும் ‘செம போத ஆகாதே’ திரைப்படம், திரைக்கு வர தாமதமாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இப்படம் எதிர்வரும் மே 18ஆம் திகதி வெளியாக இருந்தது. இந்நிலையில் இப்படத்தின் வெளியிட்டு திகதியை படக்குழுவினர் தள்ளிவைத்துள்ளனர்.

இதன்படி இப்படம், எதிர்வரும் மே 25ஆம் திகதி வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். முன்னதாக தயாரான படங்களுக்கு வழிவிடும் வகையில், இப்படத்தை தள்ளி வைத்துள்ளதாக படக்குழுவினர் விளக்கம் அளித்துள்ளனர்.

பத்ரி வெங்கடேஷ் இயக்கியிருக்கும் இந்த படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக மிஷ்டி, அனைகா சோதி நடித்துள்ளனர். அர்ஜய், ஜோன் விஜய், கருணாகரன், எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, பிரின்ஸ் நிதிக் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

யுவன் ஷங்கர் ராஜா இசையில், கோபி அமர்நாத் ஒளிப்பதிவில் உருவாகி இருக்கும் இந்த படத்தை கிக்கஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்திருக்கிறது. ஸ்ரீ தேனாண்டாள் ஸ்டூடியோ லிமிடெட் இந்த படத்தை வெளியிடுகிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)