Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

72 வருடங்களுக்கு பின்னர் மட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலைக்கு புதிய கட்டிடம்!

In இலங்கை
Updated: 12:51 GMT, May 17, 2018 | Published: 12:51 GMT, May 17, 2018 |
0 Comments
1056
This post was written by : Vithushagan

மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலையின் புதிய 3 மாடி நிர்வாகக் கட்டடத் தொகுதிக்கான அடிக்கல் நடும் வைபவத்திற்கு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் பிரதம விருந்தினராக கலந்து கொள்கிறார்.

எதிர்வரும் சனிக்கிழமை   காலை 9.30 மணிக்கு கல்லூரி அதிபர் வி.பரமேஸ்வரன் தலைமையில் இந் நிகழ்வு நடைபெறவுள்ளது.

கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித்த போகொல்லாகம சிறப்பு அதிதியாகவும், கௌரவ அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஜீ.சிறிநேசன், எஸ்.வியாளேந்திரன், எஸ்.யோகேஸ்வரன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் நல்லையாவின் பெரு முயற்சியால் உருவாக்கப்பட்டது மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலை.

72 வருடங்களுக்குப் பின்னர் புதிய 3 மாடிக்கட்டடம் ஒன்று அமைக்கப்படவுள்ளமை இதுவே முதல் தடவையாகும்.

ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் வி.மகேஸ்வரன் ஏற்பாட்டில் இதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

ஆசியர் கலாசாலையின் விரிவுரையாளர்கள், கல்வி சாரா ஊழியர்கள், ஆசிரிய உதவியாளர்கள் இதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலையில் முதலாம் வருடம் மற்றும் இறுதி வருடங்களைச் சேர்ந்த ஊவா, மத்தி, சப்ரகமுவ மாகாணங்களிலிருந்து வருகை தந்த 637 ஆசிரிய உதவியாளர்கள் கல்வி கற்று வருகிறார்கள்.

இந்தக் கலாசாலையில் கல்வி கற்று ஆசிரியர்களாக பயிற்சிபெற்று வெளியேறிய சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகிறார்கள்.

இங்கு முதன்மொழி தமிழ், ஆங்கிலம், சமூகவியல், ஆரம்பப் பிரிவு, மனைப் பொருளியல், இரண்டாம் மொழி தமிழ்,

ரோமன் கத்தோலிக்கம் ஆகிய கற்கை நெறிகளைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கான கற்றல் பயிற்சிகள் நடைபெற்று வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)