Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கர்நாடகாவில் தொடரும் சர்ச்சை: நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த அதிரடி உத்தரவு

In இந்தியா
Updated: 08:37 GMT, May 18, 2018 | Published: 08:37 GMT, May 18, 2018 |
0 Comments
1114
This post was written by : Risha

கர்நாடகா சட்டமன்றத்தில் இரகசிய முறையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துமாறு, உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், ஆட்சியமைப்பதில் சர்ச்சை ஏற்பட்டுள்ள நிலையிலேயே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை (சனிக்கிழமை) மாலை 4 மணிக்கு இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக்கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்நிலையில், 104 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக வந்த பாரதிய ஜனதா கட்சி தலைவர் எடியூரப்பாவை, ஆட்சி அமைக்குமாறு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார்.

எடியூரப்பா பதவி ஏற்க எதிர்ப்புத் எதிர்த்து 117 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவை கொண்டிருக்கும் மதசார்பற்ற ஜனதாதளம் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தன.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் காங்கிரஸ், ஜனதா தளம் கட்சிகளுக்கு பெரும்பான்மை உள்ள நிலையில் பாரதிய ஜனதாவை மட்டும் ஆட்சி அமைக்க அழைத்தது ஏன் என்று கேள்வி எழுப்பியதுடன், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)