Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் சிக்கிய கொலையாளிகள்

In இந்தியா
Updated: 10:42 GMT, May 18, 2018 | Published: 10:41 GMT, May 18, 2018 |
0 Comments
1104
This post was written by : poovannan

மதுரவாயலை – நெற்குன்றம் பகுதியைச் சேர்ந்த கொலையாளிகள் மூன்று பேர் தலைமறைவாகியிருந்த நிலையில் ஆறு ஆண்டுகளுக்கு பிறகு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கன்னியாகுமரியில் பதுங்கியிருந்த இம்மூவரையும் மதுரவாயல் பொலிஸ் பரிசோதகர் ஜார்ஜ்மில்லர் தலைமையில் நியமிக்கப்பட்ட தனிப்படையினர் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் குறித்த பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (வயது 28), சுதாகர் (வயது 34) ஆகியோருக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின் காரணமாக, சுதாகர் உள்ளிட்ட குழுவினர் மணிகண்டனை தாக்கினர். இதன்போது படுகாயமடைந்த மணிகண்டன் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இக்கொலைச் சம்பவம் தொடர்பாக மதுரவாயல் பொலிஸார் சுதாகர் உட்பட 5 பேரை கைதுசெய்தனர். வழக்கு விசாரணை நடைபெறும்போதே சுதாகர் உயிரிழந்தார். மற்ற 4 பேரும் கடந்த 2012ஆம் ஆண்டு சிறையிலிருந்து பிணையில் வெளிவந்தனர்.

பிணையில் வெளிவந்து நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாகியிருந்த இக்கொலையாளிகளில் ஒருவர் தேடப்பட்டுவருகின்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)