Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கேரளாவில் குறைந்த நாள் வருமானம் 600 ரூபாய்

In இந்தியா
Updated: 11:27 GMT, May 18, 2018 | Published: 11:22 GMT, May 18, 2018 |
0 Comments
1073
This post was written by : poovannan

கேரளாவில் ஒருவரின் குறைந்தபட்ச நாளொன்றுக்கான வருமானம் 600 ரூபாயாக உயர்த்தும் புதிய தொழிலாளர் கொள்கைக்கு அம்மாநில அரசு இணக்கம் அளித்துள்ளது.

அண்மையில் தொழிலாளர் நலத்திட்டங்களில் புதிய மாற்றங்களை மாநில அரசு கொண்டு வந்தமைக்கு அமைவாகவே, கேரள மந்திரி சபை நேற்று (வியாழக்கிழமை) இணக்கம் அளித்துள்ளது.

இது தொடர்பாக தொழிலாளர் நலத்துறை மந்திரி ராமகிருஷ்ணன் கூறுகையில், “இத்திட்டத்தில் ஒருவரின் நாளொன்றுக்கான வருமானத்தை இவ்வாறு உயர்த்துவதன்மூலம், கூலித் தொழிலாளிகள் உட்பட அனைத்து தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரம் உயரும்.

மேலும், தொழிலாளர் வங்கிகளை விரிவடையச் செய்தல், இடம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான காப்பீடு மற்றும் விடுதி சேவைகள் என்பன இப்புதிய திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன” எனத் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)