Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சோனியா, ராகுலைச் சந்திக்கவுள்ள குமாரசாமி

In இந்தியா
Updated: 08:00 GMT, May 20, 2018 | Published: 08:00 GMT, May 20, 2018 |
0 Comments
1070
This post was written by : Litharsan

காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் கர்நாடகாவில் ஆட்சியமைக்கவுள்ள குமாரசாமி நாளை (திங்கட்கிழமை) முன்னாள் காங்கிரஸ் தலைவி சோனியாகாந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி அகியோரைச் சந்திக்கவுள்ளார்.

கர்நாடகாவில் எடியூரப்பாவின் ராஜினாமாவைத் தொடர்ந்து ஜனதா தளம் கட்சியின் தலைவர் குமாரசாமி வரும் 23 ஆம் திகதி முதலமைச்சராகப் பதவியேற்கவுள்ள நிலையிலேயே இச்சந்திப்பு இடம்பெறவுள்ளது.

38 இடங்களில் வெற்றி பெற்ற ஜனதா தளம் கட்சிக்கு 78 இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி ஆதரவளித்துள்ளது.

இதனிடையே தனக்கு ஆதரவளிக்கும் முடிவெடுத்த சோனியா காந்தி மற்றும் ராகுல்காந்தி ஆகியோருக்கு குமாரசாமி நன்றி தெரிவித்துள்ளார். மேலும் நேரில் சந்திப்பதற்காக அவர் நாளை டெல்லிக்கு செல்லவுள்ளார்.

அங்கு சோனியா காந்தி மற்றும் ராகுல்காந்தி ஆகியோரை தனித்தனியே சந்தித்து பதவியேற்பு விழாவிற்கு அழைப்பு விடுக்கவுள்ளதுடன், அமைச்சு நியமனங்கள் தொடர்பில் ஆலோசனைகளையும் நடத்தவுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg