Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மக்களின் போராட்டத்தில் அரசியல் அலட்சியம்: ரஜினிகாந்த்

In இந்தியா
Updated: 12:01 GMT, May 24, 2018 | Published: 12:01 GMT, May 24, 2018 |
0 Comments
1226
This post was written by : Ravivarman

தூத்துக்குடியில் நடந்த மக்கள் போராட்டத்தில் அவர்களது உரிமைகள் அலட்சியம் செய்யப்பட்டுள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று (வியாழக்கிழமை) அவர் வெளியிட்டுள்ள காணொளி ஒன்றிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இந்த விடயத்தில் ஏற்பட்ட பாதிப்புக்களை உள்ளூர் துறைகள் உட்பட அனைத்து நிர்வாகக் கட்டமைப்புக்களின் தோல்வியாகவே நான் கருதுகின்றேன். திட்டமிட்டுக் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறையால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

காவல்துறையின் சட்டத்திற்குப் புறம்பான வரம்பு மீறிய செயற்பாடுகளால் அப்பாவித் தமிழ் மக்கள் 12 பேர் உயிரிழந்துள்ளனர். இது வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டிய விடயம்.

உறவுகளை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதுடன், காவல்துறையினருக்கெதிரான எனது கண்டனத்தினையும் பதிவு செய்து கொள்கின்றேன்” என நடிகர் ரஜினிகாந்த் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg