Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பணம் வாங்கவில்லை – இது பழிவாங்கும் செயற்பாடு! – தயாசிறி ஜயசேகர

In இலங்கை
Updated: 11:44 GMT, May 27, 2018 | Published: 11:36 GMT, May 27, 2018 |
0 Comments
1308
This post was written by : Jeyachandran Vithushan

அர்ஜுன் அலோசியஸிடம் இருந்து 10 இலட்சம் ரூபாவினை பெற்றுக் கொண்டதாக தெரிவிப்பது, தம்மை பழிவாங்கும் செயற்பாடென முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கியின் சர்ச்சைக்குரிய பிணை முறி விநியோகம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்ட அர்ஜுன் அலோசியஸிடம் தயாசிறி பணத்தை பெற்றுள்ளதாக குற்றப்புலனாய்வு பிரிவில் வாக்குமூலம் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அரசாங்கத்தில் இருக்கும் வரை இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படாத நிலையில், தற்போது அரசாங்கத்திலிருந்து விலகியதால் பழிவாங்கும் வகையில் இக்குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இக்குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய்யானதென தெரிவித்த தயாசிறி, அர்ஜூன் அலோசியஸிடம் இருந்து 118 பேர் பணம் பெற்றுள்ளதாகவும் அரசாங்கம் அவர்களின் பெயர்களை வெளிப்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் ரணிலுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரித்து வாக்களித்ததால், தயாசிறி உள்ளிட்ட 6 அமைச்சர்கள் உள்ளடங்களாக 16 பேர் பதவி துறந்து அரசாங்கத்திலிருந்து விலகியுள்ளனர்.

இந்நிலையில், இக்குற்றச்சாட்டு எழுந்துள்ளதோடு, தயாசிறியின் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் கடந்த வாரம் குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கியிருந்தார். தயாசிறி சார்பாக அவரது பாதுகாப்பு உத்தியோகத்தரே பணத்திற்கான காசோலையை பெற்றுக்கொண்டதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டின் பிரகாரம் அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg