Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சர்ச்சைக்குரிய தூத்துக்குடி ஆலை: மரண அச்சுறுத்தலுக்கு மத்தியில் மக்கள்!

In இந்தியா
Updated: 11:27 GMT, May 27, 2018 | Published: 11:27 GMT, May 27, 2018 |
0 Comments
1189
This post was written by : Ravivarman

தூத்துக்குடியில், ஸ்டெர்லைட் ஆலை நிர்மாணிக்கப்பட்டுள்ள இடத்தை அண்டி வாழும் மக்கள் மரண அச்சுறுத்தலுக்கு மத்தியில் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக மீளவிட்டான் கிராமத்தில் வாழும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் புற்று நோய், கருக்கலைதல் மற்றும் ஏனைய சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கும் ஆளாகின்றனர்.

இதனால் இதுவரை பலர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் பலர் உயிரிழக்கும் அபாயம் காணப்படுவதாகவும் மக்கள் குற்றம் சுமத்துகின்றனர். ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியாகும் வாயு, காற்றுடன் கலப்பதால் அதனைச் சுவாசிக்கும் தாம் பல்வேறு நோய்களுக்கு உள்ளாவதாகவும் மக்கள் கூறுகின்றனர்.

வாழ்வுக்கு உத்தரவாதம் அளிக்குமாறு இந்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதேவேளை, ஸ்டெர்லைட் ஆலையை மூடுமாறு வலியுறுத்தி கடந்த 22 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைகளைத் தொடர்ந்து தூத்துக்குடியில் பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவு இன்று நீக்கப்பட்டுள்ளது.

நிலைமை சுமுக வழமைக்குத் திரும்பியதை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறான நிலையில், பொலிஸாரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்த 13 பேரில் இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு அகதியாக சென்ற ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg