Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தனுஷ்கோடியில் பலத்த காற்றுடன் கடல் கொந்தளிப்பு

In இந்தியா
Updated: 10:17 GMT, Jun 11, 2018 | Published: 10:17 GMT, Jun 11, 2018 |
0 Comments
1063
This post was written by : Kemasiya

தமிழ்நாடு தனுஷ்கோடி பகுதியில் பலத்த காற்று வீசி வருவதால், மணற்புயல் மற்றும் ராட்சத கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வானிலை மய்யத்தின் எச்சரிக்கைக்கு அமைவாக இன்று (திங்கட்கிழமை) கடலை நோக்கி சுற்றுலாப்பயணிகள் செல்வதும் தடை செய்யப்பட்டுள்ளது.

கடல் அலையானது சுமார் 20 அடி உயரத்திற்கு எழும்பி கொந்தளிப்பதனால், பொதுமக்களை கடற்கரை பகுதிக்கு செல்ல அனுமதிக்காமல் பொலிஸார் பாதுகாப்பு பணியை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சாலைகள் மணலால் முடப்பட்டு, வாகனங்களும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அரிச்சல் முனைக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் அனைவரும் தனுஸ்கோடியுடன் திரும்பி ராமேஸ்வரத்திற்கு அனுப்பபட்டு வருகின்றனர்.

ஆனால் சுற்றுலா வரும் மக்கள் ஆபத்தை உணராமல், ராட்சத அலைகளுடன் செல்பி எடுத்து கொண்டனர்.

மேலும் பாம்பன் பகுதிகளில் பலத்த காற்று வீசி வருவதால், பாம்பன் பாலத்தை கடந்து செல்லும் ரயில் அனைத்தும் சிறிது நின்று செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து அப்பகுதிக்கு சென்றிருந்த சுற்றுலாப் பயணியொருவர் தெரிவிக்கையில்,

ராமேஸ்வர ஆலயத்திற்கு சென்று இறை தரிசனத்தை முடித்துக்கொண்டு, தனுஷ்கோடி கடற்பகுதி சுற்றிப் பார்க்க வந்தோம்.

பலத்த புயலின் காரணமாக மணல் அள்ளி வீசிகிறது. அத்தோடு கடல் கொந்தளிப்பு ஒரு வித வித்தியாச உணர்வை தந்துள்ளது.

நீண்ட தூரம் பயணிக்க பொலிஸார் அனுமதி தரவில்லை, எனினும் இதுவொரு புது அனுபவம் எனத் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)