Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ

In இந்தியா
Updated: 10:54 GMT, Jun 13, 2018 | Published: 10:53 GMT, Jun 13, 2018 |
0 Comments
1031
This post was written by : sujithra

மும்பையிலுள்ள வோர்லி பிரபாதேவி பகுதியில் உள்ள பியூமோண்டே டவர்ஸ் அடுக்குமாடி குடியிருப்பின் மேல் பகுதியில் தீ பரவியுள்ளது.

பியூமோண்டே டவர்ஸ் அடுக்குமாடி குடியிருப்பின் பி பிரிவின் 34ஆவது மாடியில் இருக்கும் ஒரு வீட்டில் இன்று (புதன்கிழமை) பிற்பகலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீ விபத்து குறித்து தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புப்படையினர், தீயை அணைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் தீ பரவிய மாடியிலிருந்த 95 பேர் இதுவரை பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை நடிகை தீபிகா படுகோனேவுக்கு சொந்தமான வீடொன்றும் இந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன் சேத விபரங்கள் குறித்து இன்னும் முழுமையாக அறியக்கிடைக்கவில்லை என்றும் இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)