Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வவுனியா வளாக வியாபார கற்கைகள் மாநாட்டுக்கான ஆய்வுச் சுருக்கங்கள் கோரல்!

In இலங்கை
Updated: 12:47 GMT, Jun 13, 2018 | Published: 12:47 GMT, Jun 13, 2018 |
0 Comments
1463
This post was written by : Ravivarman

யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தின் வியாபார கற்கைகள் பீடமானது இரண்டாவது வியாபார கற்கைகள் மாநாட்டுக்கான ஆய்வுச் சுருக்கங்களை ஆய்வாளர்களிடமிருந்து கோருவதாக வளாகத்தின் முதல்வர் கலாநிதி ரி. மங்களேஸ்வரன் தெரிவித்தார்.

வவுனியா, பம்பைமடு வளாகத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பம்பைமடுவில் அமைந்திருக்கும் வியாபாரக் கற்கைகள் பீடத்தில் இவ் வருடம் செப்டம்பர் 20 திகதி நடைபெறவுள்ள ஆய்வு மாநாட்டுக்கான ஆய்வுக்கட்டுரைகளின் சுருக்கங்களையே எதிர்வரும் 27 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு கோரியுள்ளார்.

இது தொடர்பாக அவர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில்,

“இம் மாநாட்டின் நோக்கங்களாக நடைமுறை விடயங்கள் உள்ளடக்கிய முகாமைத்துவம், வர்த்தகம், கணக்கியல், பொருளாதாரம், செயல்திட்ட முகாமைத்துவம், ஆங்கில மொழி கல்வி மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு பகுதிகளை உள்ளடக்கியதாக காணப்படுகின்றது.

இம் மாநாட்டின் கருப்பொருளானது வணிக சிறப்புத் தேர்வை நோக்கிய (SMART) முகாமைத்துவத்தின் வியாபார சிறப்பின் செயல்திறனை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

மேலும் அவுஸ்ரேலியாவின் Curtin பல்கலைக்கழகத்தின் தகவல் முறைமைகள் பீடம் சார்ந்த கலாநிதி நிக் தொம்சன் மற்றும் இலங்கை ஸ்ரீஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ கற்கைகளிற்கான பட்டப்பின்படிப்பு நிறுவன ஆலோசகரான சமந்த ரத்னாயக்க ஆகியோர் இம்மாநாட்டில் பிரதான உரைகளை நிகழ்த்த உள்ளனர்.

எனவே ஆய்வாளர்கள் தமது நீடிக்கப்பட்ட ஆய்வு சுருக்கத்தினை (Extended Abstract) யூன் 27ம் திகதி அல்லது அத்திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டும் என்பதுடன் இது தொடர்பான மேலதிக தகவல்களை http://www.vau.jfn.ac.lk/fbs/rcbs/rcbs2018/ என்ற இணையத்தள முகவரியில் பெற்றுக்கொள்ளலாம்” என அவர் மேலும் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)