Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மாணவி மீது பாலியல் வன்புணர்வு: யாழ்.வட்டுக்கோட்டை ஆசிரியர் கைது

In இலங்கை
Updated: 15:37 GMT, Jun 13, 2018 | Published: 15:37 GMT, Jun 13, 2018 |
0 Comments
1139
This post was written by : Jeyachandran Vithushan

தனியார் கல்வி நிலையத்திற்கு வந்த மாணவியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியமை மற்றும் சிறுமிகள் சிலருக்கு பாலியல் தொல்லை வழங்கிய குற்றச்சாட்டில் வட்டுக்கோட்டையைச் சேந்த ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வட்டுக்கோட்டையிலுள்ள தனியார் கல்வி நிலையத்தில் கற்பிக்கும் ஆசிரியர், அவரிடம் கற்கச் செல்லும் பதின்ம வயது மாணவிகளளை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்துவதாக குற்றச்சாட்டுக்கள் வெளியானது.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் 3 மாணவிகள் அவருக்கு எதிராக வாக்குமூலம் வழங்கியதை அடுத்து மேற்கொண்டுவந்த விசாரணையின் பின்னர் ஆசிரியர் இன்று (புதன்கிழமை) கைது செய்யப்பட்டார்.

இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவரும் பொலிஸார் அவரை மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த ஆசிரியரை பாடசாலையிலிருந்து நீக்குமாறு பாடசாலை நிர்வாகத்துக்கு பழைய மாணவர் சங்கமும் பெற்றோரும் கடும் அழுத்தங்களை வழங்கினர்.

இந்த நிலையில் ஆசிரியர் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகளின் முன்னகர்வுகள் தொடர்பில் பொலிஸார், பாடசாலை அதிபருக்கு அறிவித்திருந்தனர்.

அதனையடுத்து ஆசிரியரை பாடசாலையிலிருந்து இடைநிறுத்துவதாக பாடசாலை அதிபர் உத்தியோகபூர்வமாக அறிவித்தல் விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)