Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

‘நிம்மதியாக உறங்குங்கள்’: தாய்நாட்டில் ட்ரம்ப் தெரிவிப்பு

In
Updated: 05:10 GMT, Jun 14, 2018 | Published: 05:10 GMT, Jun 14, 2018 |
0 Comments
1354
This post was written by : Risha

வடகொரியாவிடமிருந்து இனிமேல் அணுவாயுத அச்சம் இல்லை, அமெரிக்க மக்கள் பயமில்லாமல் நிம்மதியாக உறங்கலாம் என, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

வடகொரிய ஜனாதிபதியுடன் சிங்கப்பூரில் நடைபெற்ற உச்சிமாநாட்டை நிறைவு செய்து, டொனால்ட் ட்ரம்ப் நேற்று (புதன்கிழமை) அதிகாலை அமெரிக்காவை சென்றடைந்தார்.

உச்சிமாநாட்டை நிறைவு செய்து தன் தாய்நாட்டை சென்றடைந்த ட்ரம்ப், தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

‘வடகொரியாவிடம் இருந்து அமெரிக்காவுக்கு வந்த ஏவுகணை மிரட்டல்கள் இனிமேல் இருக்காது. நிம்மதியாக உறங்குங்கள் என, டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

உலகமே ஆவலுடன் எதிர்பார்த்திருந்த, அமெரிக்க மற்றும் வடகொரிய தலைவர்களுக்கிடையிலான, சந்திப்பு நேற்றுமுன்தினம் சிங்கப்பூரில் வெற்றிகரமாக நிறைவடைந்தது.

இரு துருவங்களாக இருந்த வடகொரிய மற்றும் அமெரிக்க தலைவர்கள் முதன்முறையாக ஒருவரை ஒருவர் நேரடியாக சந்தித்து பிர்ச்சினைகளைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளைக் கண்டறிந்தனர்.

இதன்போது, வடகொரியா அணுவாயுதங்களை முழுமையாக ஒழிப்பது, வடகொரியா மீதான பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா நீக்குவது உள்ளிட்ட சில ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)