Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நுண் நிதிக் கடனுக்கு எதிராக மன்னாரிலும் கவனயீர்ப்புப் பேரணி

In இலங்கை
Updated: 08:01 GMT, Jun 14, 2018 | Published: 08:01 GMT, Jun 14, 2018 |
0 Comments
1054
This post was written by : Yuganthini

நுண் நிதிக் கடன் செயற்பாட்டின் பொறிக்குள் சிக்கியிருக்கும் மக்களை உடனடியாக விடுவிக்கும் பொருட்டு அரசாங்கத்திற்கும், இலங்கை மத்திய வங்கிக்கும் தொடர் அழுத்தம் கொடுக்கும் முகமாக மன்னாரில் கவனயீர்ப்புப் பேரணியொன்று இன்று (வியாழக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது.

மன்னார் மாவட்ட சிவில் சமூக அமைப்புக்கள், நல்லாட்சிக்கான பெண்கள் அமைப்பு மற்றும் மன்னார் மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்கள் ஆகியவற்றின் ஏற்பாட்டில் குறித்த பேரணி ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

மன்னார் தனியார் பஸ் தரிப்பிடத்திற்கு முன் ஆரம்பமாகிய குறித்த பேரணி மன்னார் மாவட்டச் செயலகத்தினை சென்று நிறைவடைந்தது.

இந்தப் பேரணியில் பெண்கள் அமைப்புக்கள், பொது அமைப்புக்கள மற்றும் மக்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.

கவனயீர்ப்பு பேரணியின் முடிவில் அரசாங்கத்திற்கும், இலங்கை மத்திய வங்கிக்கும் தொடர் அழுத்தம் கொடுக்கும் வகையில் கோரிக்கை அடங்கிய மகஜர் ஒன்றை மன்னார் மாவட்ட செயலகத்தின் பிரதம கணக்காளரிடம் கையளித்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)