Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நாட்டின் பெயரை மாற்ற மசிடோனிய அரசு சம்மதம்

In ஐரோப்பா
Updated: 12:26 GMT, Jun 14, 2018 | Published: 12:26 GMT, Jun 14, 2018 |
0 Comments
1044
This post was written by : Johnson paiva

மசிடோனிய அரசு தமது நாட்டின் பெயரை மாற்ற சம்மதம் தெரிவித்துள்ளது. இதற்கான உடன்பாடு மசிடோனியா – கிரீஸ் இடையே நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) கையெழுத்தானது.

மசிடோனிய அரசு தங்கள் நாட்டின் பெயரை வடக்கு மசிடோனியா குடியரசு அல்லது மசிடோனியன் மொழியில் செவர்னா மெக்டோனிஜா என மாற்றம் செய்ய சம்மதம் தெரிவித்துள்ளது.

மசிடோனியாவின் குறித்த இந்த நடவடிக்கை மூலம் அதன் அண்மைய நாடான கிரீஸ் உடனான 27 ஆண்டு கால பிரச்சினை முடிவுக்கு வருகிறது.

1991-ல் யுகோஸ்லாவியா துண்டான பிறகு மசிடோனியா சுதந்திரம் பெற்றாலும் மசிடோனியா என்ற பெயரை பயன்படுத்த பக்கத்து நாடான கிரீஸ் ஆட்சேபனை தெரிவித்து வந்தது.

கிரீஸ் நாட்டின் வட பகுதியும் மசிடோனியா என்று அழைக்கப்படுவதால் அப்பகுதியை புதிய நாடான மசிடோனியா உரிமை கோரலாம் என்ற அச்சம் காரணமாக கிரீஸ் இவ்வாறு தெரிவித்திருந்தது.

மேலும் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோ அமைப்பில் மசிடோனியா இணைவதை கிரீஸ் தனது அதிகாரம் மூலம் தடை செய்து வந்துள்ளது. ஆனால் மசிடோனியாவின் இந்த முடிவினால் கிரீஸ் இனிமேல் தடைகளை விதிக்க வாய்ப்புக்கள் இல்லையெனத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் புதிய பெயருக்கு மசிடோனிய மக்கள் மற்றும் கிரீஸ் நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்க வேண்டியுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)