Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கட்டட திறப்புவிழாவில் மகாராணியுடன் மேகன் மார்கில்

In
Updated: 04:30 GMT, Jun 15, 2018 | Published: 04:30 GMT, Jun 15, 2018 |
0 Comments
1137
This post was written by : Varshini

செஸ்டர் நகரில் புதிதாக அமைக்கப்பட்ட கட்டடமொன்றை மகாராணி எலிசபெத்துடன் இணைந்து சசெக்ஸ் சீமாட்டி மேர்கன் மார்கில் திறந்துவைத்துள்ளார்.

நடனம், உடற்பயிற்சி உள்ளிட்ட கலை அம்சங்களை பயிற்றுவிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள குறித்த அரங்கத்தை, மகாராணியும் சசெக்ஸ் சீமாட்டியும் இணைந்து நேற்று (வியாழக்கிழமை) திறந்துவைத்தனர்.

பிரித்தானிய அரச பரம்பரைக்குள் புதிதாக காலடி எடுத்து வைத்துள்ள மேகன் மார்கில், இளவரசர் ஹரியின்றி மகாராணியுடன் இணைந்து கலந்துகொண்ட முதலாவது உத்தியோகபூர்வ பொது நிகழ்வாக இது அமைந்துள்ளது.

அரச குடும்பத்தின் விசேட ரயிலில் வடமேற்கு இங்கிலாந்துக்கு ஒருநாள் முன்பாகவே இருவரும் சென்றனர். இதன்போது மகராணி மற்றும் சீமாட்டியை காண ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்து கொடியசைத்தும், மலர்கள் மற்றும் பரிசுப் பொருட்களை வழங்கியும் மகிழ்ந்தனர்.

அமெரிக்க நடிகையும் தொலைக்காட்சி பிரபலமுமான மேர்கன் மார்கில் மற்றும் பிரித்தானிய இளவரசர் ஹரி ஆகியோருக்கு கடந்த மே மாதம் உலகமே வியக்கும் வகையில் திருமணம் நடைபெற்றது.

வின்ட்ஸர் மாளிகையின் புதுவரவான மேர்கலுடன் இந்நிகழ்வில் கலந்துகொண்ட மகாராணி எலிசபெத், தனது 66 வருட ஆட்சிக்காலத்தில் ஆயிரக்கணக்கான நிகழ்வில் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)