Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

எட்டுவழிச்சாலைக்கு எதிராக போராட்டம்: நாம் தமிழர்

In இந்தியா
Updated: 15:15 GMT, Jun 20, 2018 | Published: 15:15 GMT, Jun 20, 2018 |
0 Comments
1124
This post was written by : Jeyachandran Vithushan

சென்னை – சேலம் எட்டுவழிச்சாலைக்கு எதிராக போராட்டம் நடத்தப்போவதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) விவசாயி ஒருவர் குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் இருந்து சேலத்திற்கு 277 கிலோ மீட்டர் தொலைவுக்கு பசுமை வழிச்சாலை அமைக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிக்கு விவசாயிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஐ.பி.எல். போட்டிக்கு எதிராக போராடிய வழக்கில் சீமான் சென்னை எழும்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சர்வதேச விமான நிலையங்கள் கூட, குறைவான பரப்பளவில் செயல்பட்டுவரும் நிலையில், சென்னை – சேலம் 8 வழிச்சாலைக்காக 570 ஏக்கர் நிலம் கையகப்படுத்துவது தேவையற்ற ஒன்று எனவும் இதன் போது கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg