Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் சிவம் பாக்கியநாதனுக்கு கௌரவிப்பு!

In ஆன்மீகம்
Updated: 05:40 GMT, Jun 24, 2018 | Published: 05:40 GMT, Jun 24, 2018 |
0 Comments
1074
This post was written by : Anojkiyan

மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் சிவம் பாக்கியநாதன், ஆற்றிய சேவைகளுக்காக கௌரவிக்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு தாமரைக்கேணி ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய தமிழர் தம் பாரம்பரிய முறையுடன் கூடிய வருடாந்த சக்தி சடங்கு விழாவின் இரண்டாம் நாள் சடங்கு நேற்று (சனிக்கிழமை) நடைபெற்றபோதே அவர், கௌரவிக்கப்பட்டார்.

ஆலய பரிபாலன சபையினரின் பங்கு பற்றலுடன் இடம்பெற்ற இந்நிகழ்வில், ஆலய பிரதம குரு சக்தி கே. குமாரதாசனின் ஆசியுரையுடன், ஆலயத் தலைவர் கு.சுவேந்திரநாதன் மாநகர சபை உறுப்பினரை பொன்னாடை போர்த்திக் கௌரவித்தார்.

மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினரும் சுகாதார நிலையியற் குழுவின் தலைவரும் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட விஸ்வகர்ம சங்கத் தலைவரும் ஊடகவியலாளருமான சிவம் பாக்கியநாதன் அரசடி வட்டாரத்தில் ஆற்றிய சேவைகள் ஏராளம்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg