Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

குழந்தைகளை ஏற்றிச்சென்ற பேருந்து இடைமறிப்பு: மனதை உருக்கும் காணொளி

In உலகம்
Updated: 11:42 GMT, Jun 24, 2018 | Published: 10:05 GMT, Jun 24, 2018 |
0 Comments
1142
This post was written by : sujithra

புகலிடக் கோரிக்கையாளர்களிடம் இருந்து பிரிக்கப்பட்ட குழந்தைகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்றை டெக்ஸாசின் எல்லைப்பகுதியில் வைத்து குடியேற்ற உரிமைக்கு ஆதரவு தெரிவிக்கும் போராட்டக் குழுவொன்று இடைமறித்துள்ளது.

இது குறித்து வெளியான காணொளியில் பேருந்திற்குள் இருக்கும் சிறுவர்களுடன் ஆர்ப்பாட்டக்குழு கலந்துரையாடுவதற்கு முயற்சி செய்யும் காட்சிகள் வெளிவந்துள்ளன.

அந்த பேருந்து டெக்ஸாசிலிருந்து நகர்வதற்கு முன்னர் ஆரப்பாட்டக்காரர்கள் பேருந்திற்கு முன்பாக அமர்ந்து அதை தடுத்து நிறுத்தியுள்ளனர். அதனையடுத்த பாதுகாப்பு அதிகாரிகள் அவர்களை கழைந்து செல்லுமாறு கூறிய போதும் அது பயனளிக்கவில்லை.

ட்ரம்பின் Zero Tolerance  கொள்கையின் கீழ், சட்டவிரோத குடியேற்றவாசிகள் என்ற அடிப்படையில் கடந்த காலங்களில் 2000 குழந்தைகள் அவர்களின் குடும்பத்திடமிருந்து பிரித்து வைக்கப்பட்டனர். ஆனால் இதற்கு பல்வேறு தரப்புகளிலிருந்தும் வந்த அழுத்தங்களை அடுத்து கடந்தவாரம் அந்த கொள்கையை தளர்த்துவதற்கான நடவடிக்கையில் ட்ரம்ப் ஈடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg