Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தேர்தலை விரைவாக நடத்த வேண்டும்: கூட்டு எதிரணி

In இலங்கை
Updated: 13:06 GMT, Jun 24, 2018 | Published: 12:59 GMT, Jun 24, 2018 |
0 Comments
1083
This post was written by : Jeyachandran Vithushan

தேர்தலை நடத்தாமல் அரசு தொடர்ந்தும் சர்வாதிகார ஆட்சியை முன்னெடுக்க திட்டங்களை மேற்கொண்டு வருவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினார் செஹான் சேமசிங்க குற்றம் சாட்டியுள்ளார்.

இந்நிலையில் இதனை விடுத்து விரைவில் மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டும் என அரசாங்கத்திடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அநுராதபுரம் பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற கூட்டு எதிர்கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும், அரசாங்கத்தில் இருந்து விலகிய சுதந்திர கட்சியின் 16 உறுப்பினர்களும் கூட்டு எதிர்க்கட்சியுடன் இணைவதில் எவ்வித பிரச்சினையும் இல்லை எனவும் செஹான் சேமசிங்க இதன் போது தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg