Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஐ.தே.க. பின்னடைவை சந்தித்துள்ளது: நவீன் திஸாநாயக்க

In இலங்கை
Updated: 07:12 GMT, Jun 25, 2018 | Published: 07:12 GMT, Jun 25, 2018 |
0 Comments
1105
This post was written by : Varshini

ஐக்கிய  தேசியக் கட்சி பாரிய பின்னடைவை சந்தித்துள்ள நிலையில், அதனை பாதுகாத்து வெற்றியடையும் கட்சியாக மாற்ற வேண்டுமென கட்சியின் தேசிய அமைப்பாளர் நவீன் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

புதிய கட்சிகளையும் விட பின்தங்கிய ஒரு நிலைக்கு ஐக்கிய தேசியக் கட்சி சென்று கொண்டிருப்பதாகவும் அவர் கவலை தெரிவித்தார்.

கொத்மலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்-

“2015இல் தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டதன் பின்னர் தமது கனவுகளை நிறைவேற்றிக்கொள்ள முடியும் என அரசாங்கம் நம்பியது. ஆனால் அந்த நம்பிக்கை இப்போது சிதைந்து விட்டது. அவ்வாறான ஒரு நிலைமை இப்போது இல்லை.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி போன்ற புதிய கட்சிகளை பிட ஐக்கிய தேசிய கட்சி பின்தங்கிய நிலைக்குச் சென்றுள்ளது. இந்நிலையில் கட்சியை கட்டியெழுப்புவதற்கு முழுமையான முயற்சிகளை முன்னெடுப்பது அவசியம். தலைமையுடன் முரண்பட்டேனும் தற்போது காணப்படும் பிரச்சினைக்கு தீர்வு காண்போம்” என்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg