Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆபரணத்துறை தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல்!

In இலங்கை
Updated: 05:47 GMT, Jul 6, 2018 | Published: 05:47 GMT, Jul 6, 2018 |
0 Comments
1037
This post was written by : Vithushagan

இரத்தினக்கல் மற்றும் ஆபரணத்துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் இடம்பெற்றது.

ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (வியாழக்கிழமை) முற்பகல் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் இத்தொழிற்துறையில் உள்ளவர்களும் வர்த்தகர்களும் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் விரிவாக ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

தங்கத்திற்கு விதிக்கப்பட்டுள்ள நூற்றுக்கு 15 வீத இறக்குமதி வரி மற்றும் ஆபரண தொழிற்துறையில் அதன் மோசமான பிரதிபலிப்புகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதுடன், தேசிய இரத்தினக்கற்கள் ஆபரண அதிகார சபையின் சில முன்மொழிவுகளும் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டன.

இரத்தினக்கல் அகழ்விற்கு அனுமதிப்பத்திரங்களை வழங்கும்போது அரச நிறுவனங்களிடமிருந்து பரிந்துரைகளை பெற்றுக்கொள்வதில் உள்ள பிரச்சினைகள் மற்றும் தாமதம் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

இரத்தினக்கல் அகழ்விற்கு காணிகளை விடுவிக்கும்போது அரச நிறுவனங்கள் மற்றும் பெருந்தோட்ட கம்பனிகள் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

இந்த பிரச்சினைகளில் தற்போது தீர்வுகளை வழங்கக் கூடிய பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வுகளை வழங்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்த ஜனாதிபதி, ஏனைய பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினர்களின் பங்குபற்றுதலுடன் ஜூலை மாதம் 12ஆம் திகதி மீண்டும் கலந்துரையாடல் ஒன்றை ஏற்பாடு செய்யுமாறு ஆலோசனை வழங்கினார்.

இந்த கலந்துரையாடலில் அமைச்சர் தயா கமகே, பாராளுமன்ற உறுப்பினர் ஏ.கே.விஜேதுங்க, மகாவலி அபிவிருத்தி சுற்றாடல்துறை அமைச்சின் செயலாளர் அநுர திசாநாயக்க, இரத்தினக்கல் ஆபரண அதிகார சபையின் தலைவர் பேசல பண்டார ஜயரத்ன ஆகியோர் கலந்துகொண்டனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)