Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உலக பணக்காரராக 3 ஆவது இடத்துக்கு முன்னேறினார் ஃபேஸ்புக் நிறுவனர்

In வணிகம்
Updated: 10:07 GMT, Jul 7, 2018 | Published: 10:07 GMT, Jul 7, 2018 |
0 Comments
1179
This post was written by : Litharsan

உலகின் பிரபல சமூக வலைத்தளமாகவுள்ள ஃபேஸ்புக்கின் நிறுவனரான மார்க் சுக்கர்பேர்க், உலக பணக்காரர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

இதுவரை 3 ஆவது இடத்திலிருந்த வாரென் பஃபெட்டை பின்தள்ளி அவர் அந்த இடத்தைப் இவர் பிடித்துள்ளார். தற்போது மார்க் சுக்கர்பேர்க்கின் சொத்து மதிப்பு 8 ஆயிரத்து 160 கோடி அமெரிக்க டொலர்கள் என கணக்கிடப்பட்டுள்ளது. இது வாரென் பஃபெட்டை விட 37.3 கோடி டொலர்கள் அதிகமாகும்.

தற்போது உலக பணக்காரர்கள் பட்டியலில் அமேஷன் நிறுவுனர் ஜெஃப் பெஸோஸ் முதலாவது இடத்திலும் மைக்ரொசொஃப்ட் நிறுவுனர் பில்கேட்ஸ் இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.

இந்நிலையில் பங்குச் சந்தையில் ஃபேஸ்புக் நிறுவனத்தின் பங்குகள் 2.4 சதவீதத்தால் வளர்ச்சியடைந்ததைத் தொடர்ந்து அதன் நிறுவனர் மார்க் சுக்கர்பேர்க் பணக்காரர்கள் பட்டியலில் முன்னேற்றம் அடைந்துள்ளார்.

உலக பணக்காரர்கள் பட்டியலில் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்தவர்கள் முதல் மூன்று இடங்கைளைப் பிடித்திருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)