Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

புதிய தேர்தல் முறையால் முஸ்லிம்கள் அரசியல் அநாதைகளாகும் நிலைமை: பைசல் காஸிம்

In இலங்கை
Updated: 10:11 GMT, Jul 7, 2018 | Published: 10:11 GMT, Jul 7, 2018 |
0 Comments
1057
This post was written by : Ravivarman

மாகாண சபைத் தேர்தலை புதிய முறையின் கீழ் நடத்தினால் முஸ்லிம்கள் அரசியல் அநாதைகளாகி நடுத் தெருவுக்குச் செல்லும் நிலை ஏற்படும் என சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய பிரதி அமைச்சர் பைசல் காஸிம் தெரிவித்தார்.

மாகாண சபைத் தேர்தல் முறைமை தொடர்பில் நேற்று (வெள்ளிக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிந்த கையோடு மாகாண சபைத் தேர்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றது.

இப்போதுள்ள முறைமையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்று ஒரு சாராரும் புதிய முறைமையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்று இன்னொரு சாராரும் கூறி வருகின்றனர்.

புதிய முறைமையின் கீழ் இத்தேர்தல் நடாத்தப்பட்டால் அது சிறுபான்மையான முஸ்லிம்களுக்குப் பேராபத்தை ஏற்படுத்தி விடும். இதனால் முஸ்லிம்களை அரசியல் அநாதைகளாக மாற்றி நடுத் தெருவிற்குத் தள்ளிவிடும் ஆபத்தான புதிய முறைமையை எம்மால் ஒருபோதும் ஆதரிக்க முடியாது.

புதிய முறைமையால் தேர்தல் செலவு குறையும் என்று கூறுகின்றார்கள். அது பொய்யாகும். இதனால் செலவு கூடுமே தவிர குறையாது.  நாடாளுமன்றத் தேர்தலுக்கு செலவழிப்பதுபோல் புதிய முறைமையின் கீழான மாகாண சபைத் தேர்தலுக்கு செலவழிக்க வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)