Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அமர்நாத் யாத்திரை மீண்டும் ஆரம்பம்!

In இந்தியா
Updated: 10:44 GMT, Jul 7, 2018 | Published: 10:31 GMT, Jul 7, 2018 |
0 Comments
1063
This post was written by : Litharsan

மோசமான வானிலை மற்றும் அனர்த்தங்கள் காரணமாக தடைப்பட்டிருந்த அமர்நாத் யாத்திரை இன்று (சனிக்கிழமை) மீண்டும் தொடங்கியுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்துவந்ததால் யாத்திரை கடந்த வியாழக்கிழமை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. எனினும் தற்போது அனர்த்த நிலைமை குறைவடைந்துள்ள நிலையில் மீண்டும் யாத்திரை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அமர்நாத் குகையில் இந்த ஆண்டு தோன்றியுள்ள பனி லிங்கத்தை இதுவரை 73 ஆயிரத்து 23 பக்தர்கள் தரிசித்துள்ளனர். மேலும் தரிசனம் செய்வதற்காக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஜம்மு அடிவார முகாமில் காத்திருக்கின்றனர்.

இதனிடையே, 8 ஆவது குழுவாக பாகல்ஹம் வழித்தடத்தில் யாத்திரை மேற்கொள்ளும் 311 பெண்கள் உட்பட 2 ஆயிரத்து 203 பேர் இன்று பகவதி நகர் அடிவார முகாமிலிருந்து 51 வாகனங்களில் தமது யாத்திரையை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)