Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரஷ்யாவிற்கு இலாபத்தை அள்ளியிறைத்த உலகக் கிண்ண போட்டி

In வணிகம்
Updated: 12:01 GMT, Jul 8, 2018 | Published: 12:01 GMT, Jul 8, 2018 |
0 Comments
1070
This post was written by : Farwin Hanaa

2018 உலகக் கிண்ண உதைப்பந்தாட்டப் போட்டியானது உலகக் கால்ப்பநதாட்ட ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளதோடு அது ரஷ்யாவிற்கும் அபரிமிதமான பொருளாதார வருவாயை ஈட்டித்தந்துள்ளதாகக் கூறப்படுகின்றது.

உலகக் கிண்ண உதைப்பந்தாட்டத்தைப் போட்டித் தொடரைப் பார்வையிட ரஷ்யாவிற்குப் பயணித்த ரசிகர்களினாலேயே பாரியளவு வருமானம் கிடைத்துள்ளது. குறிப்பாக போட்டி இடம்பெற்ற சதுக்கத்தைச் சூழ அவர்கள் தங்கி உண்டு களித்த கடைகள், ஹோட்டல்களுக்கு என்றுமில்லாத வகையில் பாரிய லாபம் கிடைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

‘சாதாரணமாக 15சதவீத இலாபத்தினைப் பெறும் நாம் உலகக்கிண்ணத் தொடர் இடம்பெற்றக் காலப் பகுதியினுள் 50சதவீத இலாபத்தினை வெளிநாட்டவரிடமிருந்து பெற்றோம்’ என குறித்த பகுதியிலுள்ள பிரபல கடையுரிமையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் சாதாரணமாக உலகக்கிண்ணத் தொடரைப் பார்வையிடவருபர்களின் கொள்வனவு அளவைவிட இம்முறை அதிகமாக இருந்ததாகக் கூறினார்.

2018 உலகக் கிண்ண உதைப்பந்தாட்டப் போட்டித் தொடரில் ரஷ்யா தோற்றாலும் பொருளாதார ரீதியில் பாரிய வெற்றியைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)