Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

குடியேற்றவாசிகள் கொள்கை: அமெரிக்க அரசாங்கத்திற்கு நீதிமன்றம் எச்சரிக்கை

In
Updated: 11:08 GMT, Jul 11, 2018 | Published: 04:27 GMT, Jul 11, 2018 |
0 Comments
1097
This post was written by : Risha

அமெரிக்காவிற்குள் நுழைந்த குடியேற்றவாசிகளிடமிருந்து குடிவரவு அதிகாரிகளினால் பிரிக்கப்பட்ட குழந்தைகளை பெற்றோரிடம் ஒப்படைக்க உடனடி நடவடிக்கை எடுக்க தவறினால், அபராதங்களை எதிர்நோக்க நேரிடுமென அமெரிக்க நீதிபதி எச்சரித்துள்ளார்.

ஐந்து வயதிற்குட்பட்ட 63 குழந்தைகளை பெற்றோரிடம் ஒப்படைக்க நேற்று (செவ்வாய்க்கிழமை) வரை காலக்கெடு வழங்கப்பட்டிருந்ததோடு, கடந்த மாதம் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவில் எவ்வித மாற்றமும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஏனைய 2 ஆயிரம் குழந்தைகளை எதிர்வரும் 26ஆம் திகதிக்குள் பெற்றோரிடம் இணைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இவை உறுதியான காலக்கெடு என்றும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், மரபணு சோதனைகளை மேற்கொண்டு பிள்ளைகளை பெற்றோரிடம் இணைப்பதற்கு தமக்கான காலக்கெடுவை நீடிக்குமாறு அரசாங்க தரப்பில் கோரப்பட்டுள்ளது.

கடந்த மே மாத ஆரம்பத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் ஏற்படுத்தப்பட்ட குடியேற்றவாசிகள் தொடர்பான கொள்கைக்கு அமைவாக சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமான குழந்தைகள் பெற்றோரிடமிருந்து பிரிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)