Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பார்சிலோனா அணியிலிருந்து போலின்ஹோ வெளியேறினார்!

In உதைப்பந்தாட்டம்
Updated: 06:28 GMT, Jul 11, 2018 | Published: 06:28 GMT, Jul 11, 2018 |
0 Comments
1038
This post was written by : Varshini

பிரேஸில் கால்பந்து அணியின் மத்திய கள வீரரான போலின்ஹோ, பிரபல கால்பந்து கழக அணியான பார்சிலோனா அணியிலிருந்து வெளியேறினார்.

ஓராண்டு காலம் இடமாற்றம் முறையில் பார்சிலோனா அணிக்காக விளையாடிவந்த நிலையிலேயே போலின்ஹோ, அணியிலிருந்து வெளியேறியுள்ளார்.

கழக அணிகளில் புகழ் பூத்த அணியான பார்சிலோனா அணிக்கு பல வெற்றிகளை பெற்றுத் தந்த போலின்ஹோ, தற்போது அணியிலிருந்து விடைபெறுவது, அவ் அணிக்கும் கடும் பின்னடைவை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சீனாவின் கழக அணியான குவாங்ஜோ எவர்கிரண்டே, அணியிலிருந்த போலின்ஹோ, கடந்த 2017ஆம் ஆண்டு பார்சிலோனா அணிக்காக இடமாற்றம் முறையில் ஓராண்டு விளையாடுவதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

கடந்த ஆண்டு ஒகஸ்ட் மாதம், 47 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு பார்சிலோனா அணிக்காக இடமாற்றம் செய்யப்பட்ட போலின்ஹோ, லா லிகா கால்பந்து தொடர் மற்றும் கிங்ஸ் கால்பந்து தொடர் ஆகியவற்றில் பார்சிலோனா அணி, சம்பியன் பட்டம் வெல்வதற்கு உறுதுணையாக இருந்தார்.

29 வயதான போலின்ஹோ, பார்சிலோனா அணிக்காக 49 போட்டிகளில் விளையாடி 9 கோல்களை அடித்துள்ளார்.

இதுதவிர, ரஷ்யாவில் நடைபெற்ற உலகக்கிண்ண கால்பந்து தொடரில், பிரேஸில் கால்பந்து அணியில் இடம்பெற்றிருந்த போலின்ஹோ, ஐந்து போட்டிகளில் விளையாடி 1 கோல் அடித்திருந்தார்.

உலகக்கிண்ண கால்பந்து தொடரில் பிரேஸில் அணி, காலிறுதி போட்டியில் பெல்ஜியம் அணியிடம் 1-2 என்ற கோல்கள் கணக்கில் தோல்வியை தழுவி தொடரிலிருந்து வெளியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)