Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரொறன்ரோவில் பலரை கொலைசெய்த நபருக்கு சொந்தமான இடங்களில் பொலிஸார் தேடுதல் வேட்டை!

In கனடா
Updated: 12:00 GMT, Jul 11, 2018 | Published: 11:55 GMT, Jul 11, 2018 |
0 Comments
1034
This post was written by : Jeyachandran Vithushan

ரொறன்ரோ பகுதியில் தொடர் கொலைச் சம்பவங்களில் ஈடுபட்டுவந்த நபருக்கு சொந்தமான பகுதிகளில் பொலிஸார் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்தவகையில் அப்பகுதில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடத்திய தேடுதலில், மேலும் சில மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

ரொறன்ரோ பகுதியில் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல், பலர் காணாமல் போனதை அடுத்து, இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்.

இதன் பின்னர் Selim Esen, Majeed Kayhan, Soroush Mahmudi, Dean Lisowick, Skandaraj Navaratnam, Abdulbasir Faizi மற்றும் Kirushna Kumar Kanagaratnam ஆகியோர் காணாமற் போனதாக வழங்கப்பட்ட முறைப்பட்டிருக்கு அமைய Bruce McArthur என்ற 66 வயதுடைய நபர் மீது கொலை குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

இந்நிலையில் அவருக்கு சொந்தமான பகுதிகளில் மேற்கொண்ட தேடுதலின் போது 7 பேரின் உடல்கள் சிதைவடைந்த நிலையில் மீட்கப்பட்டிருந்த நிலையில், நேற்றும் மீட்புப்பணிகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)