Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மன்னார் கடற்பரப்பில் கரையொதுங்கிய அரியவகை டொல்பின்!

In இலங்கை
Updated: 15:41 GMT, Jul 11, 2018 | Published: 14:10 GMT, Jul 11, 2018 |
0 Comments
1233
This post was written by : Jeyachandran Vithushan

தனுஸ்கோடி – மன்னார் வளைகுடா கடல் பகுதியில் அரியவகை இனத்தை சேர்ந்த டொல்பின் ஒன்று இன்று (புதன்கிழமை) கரையொதுங்கியுள்ளதாக அப்பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் உடன் நீரியல் வளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியதையடுத்து கூன் முதுகு ஓன்கி இனத்தைச் சேர்ந்த குறித்த டொல்பினை கால்நடை மருத்துவர் மூலம் உடற்கூற்று பரிசோதனை செய்தனர்.

இதன் பின்னர் குறித்த டொல்பின் புதைக்கப்பட்டதாக அப்பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இது தொடர்பில் கருத்து தெரிவித்த அதிகாரி ஒருவர், கரையொதுங்கிய டொல்பின் ‘கூன் முதுகு ஓன்கி’ என்ற இனத்தைச் சேர்ந்த பெண் டொல்பின் என கூறினார்.

அத்துடன் அது சுமார் 50 கிலோ எடையும் 5 அடி நீளம் கொண்ட 9 வயது மதிக்கத்தக்கது என்றும் அந்த டொல்பினிற்கு கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டமையாலேயே இறந்திருக்கலாம் என்றும் கூறினார்.

மேலும் இதுபோன்ற அரியவகை உயிரினங்களை வேட்டையாடினால் 3 வருடங்கள் முதல் 7 வருடங்கள் வரை சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் எனவும் தெரிவித்தார் .

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)