Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நிலைபேறான அபிவிருத்தியே எமது இலக்கு – சிங்கப்பூர் மாநாட்டில் பிரதமர்

In இலங்கை
Updated: 02:04 GMT, Jul 12, 2018 | Published: 02:04 GMT, Jul 12, 2018 |
0 Comments
1109
This post was written by : Litharsan

தற்போதைய அரசாங்கம் நிலைபேறான அபிவிருத்தியை நோக்கியே பயணிக்கின்றதென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன் அந்த இலக்கை 2030 ஆம் ஆண்டில் அடைந்துவிடுவோம் என்றும் அவர் கூறினார்.

பிரதமர் தலைமையில் தெற்காசிய நாடுகளின் சபாநாயகர்களின் மூன்றாவது வருடாந்த மாநாடு சிங்கப்பூரில் நேற்று (புதன்கிழமை) ஆரம்பமானது. அதில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் குறித்த அபிவிருத்தி இலக்கை அடைவதற்கு அரச மற்றும் தனியார் துறையினரின் ஒத்துழைப்புடன் விசேட திட்டமொன்று தேசிய கொள்கையாக இனங்காணப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டார்.

அத்துடன் சிறிய மற்றும் மத்திய தொழில் முயற்சியாளர்களை உருவாக்கும் நோக்கில் விசேட கடன் திட்டமொன்றும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த செயற்திட்டத்தைக் கண்காணிப்பதற்கு நாடாளுமன்றில் விசேட கண்காணிப்புக் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. 2030 ஆம் ஆண்டளவில் இந்த இலக்குகளை அடைய எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளது என்று பிரதமர் மேலும் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)