Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கையில் மூன்றாவது சர்வதேச விமான நிலையம்!

In இலங்கை
Updated: 04:22 GMT, Jul 12, 2018 | Published: 04:17 GMT, Jul 12, 2018 |
0 Comments
3086
This post was written by : Risha

இலங்கையின் மூன்றாவது சர்வதேச விமான நிலையம் ஹிங்குரக்கொட பிரதேசத்தில் நிர்மாணிக்கப்படவுள்ளது.

திருகோணமலை அபிவிருத்திக்காக முன்மொழியப்பட்டுள்ள மூலோபாய திட்டத்தின் கீழ், சர்வதேச விமான நிலையம் மற்றும் சர்வதேச கிரிக்கெட் அரங்கமொன்றும் அமைக்கப்படவுள்ளது.

இத்திட்டமானது, மாநர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவினால் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் நேற்று (புதன்கிழமை) கையளிக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன், கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம, மாநர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் நிஹால் ரூபசிங்க உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

திருகோணமலை மாவட்டம் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களின் பாரிய அபிவிருத்தியை கருத்திற்கொண்டு இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)