Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கையிடமிருந்து கச்சதீவை மீட்க வேண்டும்: ஜெயக்குமார்

In இந்தியா
Updated: 10:55 GMT, Jul 12, 2018 | Published: 09:21 GMT, Jul 12, 2018 |
0 Comments
1107
This post was written by : Kemasiya

இலங்கையிடமிருந்து கச்சதீவை மீட்பதே இந்திய மீனவர்களுக்கு கொடுக்கும் நிரந்தர தீர்வு என, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை ராயபுரத்தில் இன்று (வியாழக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த அவர் மேற்படி கூறியுள்ளார். இதன்போது மேலும் கூறிய அவர்,

“கச்சதீவு கடந்த 1974 ஆம் ஆண்டு தி.மு.க.வினால் இலங்கையிடம் தாரைவார்க்கப்பட்டது. எனவே அதனை மீட்பதே மீனவர்களுக்கு கிடைக்கும் நிரந்தர தீர்வு என்ற அடிப்படையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இது தொடர்பாக வழக்கொன்றை உச்சநீதிமன்றில் தொடுத்துள்ளார்.

குறித்த வழக்கு நிலுவையிலுள்ள நிலையில், இலங்கை அரசுக்கு இந்திய அரசு சில நிபந்தனைகளை முன்வைத்திருந்தது. அதாவது, காற்றின் வேகம் காரணமாகவே படகுகள் திசை மாறுகின்றது.  எனவே அவ்வாறு திசைமாறி வரும் படகுகளை தடுத்து வைப்பதோடு, மீனவர்களை கைது செய்து, மீனவர்களை தாக்குவது, அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்துவது போன்ற வன்செயல்களில் இலங்கை அரசு ஈடுபடக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் இன்று ஜெயலலிதாவும் இறந்துவிட்ட நிலையில், மீனவர்கள் மீதான இலங்கை அரசின் வன்மங்கள் அதிகரித்துவிட்டன. எனவே இது தொடர்பில் தீர்வு கிடைக்க வேண்டுமாயின் கச்சதீவு மீட்கப்பட வேண்டும்” என்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)