Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழ்நாடு பிரீமியர் லீக் ரி-20 தொடர் ஆரம்பம்

In கிாிக்கட்
Updated: 09:44 GMT, Jul 12, 2018 | Published: 09:44 GMT, Jul 12, 2018 |
0 Comments
1054
This post was written by : Litharsan

ரி.என்.பி.எல். என்று அழைக்கப்படும் தமிழ்நாடு பிரீமியர் ‘லீக்’ ரி-20 கிரிக்கெட் தொடரின், மூன்றாவது அத்தியாயம் பிரமாண்ட கண்கவர் நிகழ்வுகளுடன் ஆரம்பமானது.

நேற்று (புதன்கிழமை) ஆரம்பமான இத்தொடரின் முதல் போட்டியிலேயே திண்டுக்கல் டிராகன்ஸ்- ரூபி திருச்சி வோரியர்ஸ் அணிகள் மோதின. நெல்லை சங்கர்நகர் ஐ.சி.எல். மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், ரூபி திருச்சி வோரியர்ஸ் அணி முதல் வெற்றியை சுவைத்தது.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி களமிறங்கிய திண்டுக்கல் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 172 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அணியின் அதிகபட்ச ஓட்டமாக ராமலிங்கம் ரோஹித் 46 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்துவீச்சில் எம்.எஸ். சஞ்சய், லக்ஷ்மி நாராயணன், தக்ஷினமூர்த்தி குமரன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.
இதனைதொடர்ந்து, 173 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய ரூபி திருச்சி வோரியர்ஸ் அணி, 19.5 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது.

இதில் அணியில் சுரேஷ் குமார் ஆட்டமிழக்காது 45 ஓட்டங்களை அதிகபட்ச ஓட்டமாக பெற்றுக் கொண்டார். பந்து வீச்சில் அஸ்வின் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இப்போட்டியின் ஆட்டநாயகனாக 24 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 4 பவுண்ரிகள் அடங்களாக 45 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட ரூபி திருச்சி வோரியர்ஸ் அணியின் சுரேஷ் குமார், போட்டியின் ஆட்டநாயகனாக தெரிவுசெய்யப்பட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)