Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழிசையை நோக்கி கண்டனம் வெளியிட்டார் கமல்ஹாசன்!

In இந்தியா
Updated: 03:34 GMT, Jul 14, 2018 | Published: 03:34 GMT, Jul 14, 2018 |
0 Comments
1094
This post was written by : Kemasiya

மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன், பா.ஜ.க.வின் தமிழக தலைவர் தமிழிசையை நோக்கி என்னை தனிப்பட்ட முறையில் தாக்கும் உரிமை தமிழிசைக்கு இல்லை என கண்டனம் வெளியிட்டுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை), செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன் மேற்படி கண்டனம் வெளியிட்டுள்ளார்.

அமாவாசை தினத்தில் கொடியேற்றியது பற்றி தமிழிசை சவுந்தரராஜன் கூறுவது சரியாக இருக்கலாம். ஆனால் என்னை போலி பகுத்தறிவுவாதி என்று கூற அவருக்கு என்ன உரிமை இருக்கிறது.

நான் பகுத்தறிவாதி தான். மக்கள் நீதி மய்யத்தில் உள்ள அனைவரும் பகுத்தறிவுவாதிகள் என்று கூறமுடியாது. என்னுடைய கட்சியினர் இதுபோன்று ஏற்பாடு செய்திருந்தால் அவர்களை நான் கண்டிக்க கடமைப்பட்டு உள்ளேன் என்றார்.

பல்வேறு தரப்பினரும், பல்வேறு மதத்தினரும், பல்வேறு நம்பிக்கை உள்ளவர்களும் மக்கள் நீதி மய்யத்தில் உள்ளனர். என்னுடைய மகள் சுருதி பகுத்தறிவுவாதி என்று சொல்ல முடியாது. நான் அரசியலில் பகுத்தறிவு கொள்கையை பரப்பி மூடநம்பிக்கையை ஒழிக்க மட்டும் வந்திருந்தால் தவறாக இருக்கலாம். ஆனால் நான் ஏழ்மையை ஒழிப்பதற்கும், ஊழலை ஒழிப்பதற்கும் தான் வந்திருக்கிறேன். அதற்கு எல்லாருடைய உதவியும் தேவைப்படுகிறது என்றும் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)