Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பங்குனி உத்தரம் 16.03.2014

In ஆன்மீகம்
Updated: 16:48 GMT, Mar 14, 2014 | Published: 16:44 GMT, Mar 14, 2014 |
0 Comments
1551
This post was written by : Webmaster

deviyar thirumanam
பங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திரம் வரும் நாள் பங்குனி உத்திரம் ஆகும்.

சிவனுக்கும் பார்வதிக்கும் மணம் செய்வித்த நாள் பங்குனி உத்தர நாளாகும். சிவனின் மோன நிலையைக் கலைத்த மன்மதனை எரித்ததால் கலங்கி நின்ற தேவர்களுக்கு ஆறுதல் வார்த்தையாக சிவன் தேவியை இத்தினத்தில் மணந்தார் என்று புராணக்கதைகள் கூறுகின்றன.

கயிலையில் சிவன்-பார்வதி திருமணம் நடந்த போது அங்கு தேவர்கள் அனைவரும் திரண்டு விட்டதால் வடதிசை தாழ்ந்து தென் திசை உயர்ந்தது. உடனே உலகை சமன் செய்வதற்காக இறைவன் அகத்தியரை அழைத்து தென் திசைக்கு செல்ல உத்தரவிட்டார். அதன்படி அகத்தியர் தென் திசை வந்தார். உலகம் சமம் ஆயிற்று.

பழனியில் காவடி எடுக்கும் காரணம்

அகத்திய முனிவர் தனது சீடனான இடும்பனிடம் சிவகிரி – சக்திகிரி என்னும் இரு மலைகளை, தென் பகுதியில் அமைந்துள்ள தனது இடத்திற்கு எடுத்து வருமாறு பணித்தான்.

காவடி போன்ற அமைப்பில் இருபுறமும் இரு மலைகளை வைத்து சுமந்த படி ஆகாய மார்கமாக பயணித்தான்  இடும்பன். செல்லும் வழியில் சிறிது ஓய்வு பெரும் பொருட்டு பழனி அருகில் காவடியை நிலத்தில் வைத்தார். ஓய்விற்குப் பின் பெரிதும் முயன்றும் இடும்பனால் காவடியை அசைக்க முடியவில்லை. அச்சமயம் மலை மேல் ஒரு பாலகன் நின்றிருப்பது இடும்பனின் கண்களுக்கு புலப்பட்டது.

கோபமுற்ற இடும்பன் மலையை விட்டு வெளியேறும்படி பாலகனிடம் கூற பாலகனோ தன் நிலையில் இருந்து சிறிதும் அசையவில்லை. படைத்தல் , காத்தல் , அழித்தல், மறைத்தல் , அருளல் என்று ஐந்து தொழில்களையும் ஒருங்கே புரியும் பரம்பொருளே குமாரக் கடவுளாக  பால உருவம் தரித்து நிற்பதை இடும்பன் உணரவில்லை.

பழனி ஆண்டவனுடன் போரிட முனைந்த இடும்பனை முருகன் சம்ஹாரம் செய்தார். இடும்பனின் மனைவி முருகப்பெருமானிடம் நடந்தவற்றைக்கூறி தனது கணவனை உயிர்ப்பிக்கவேண்டும் என்று தொழுது நின்றாள் அவளது வேண்டுதலை ஏற்ற பெருமான் இடும்பனை உயிர்ப்பித்து தனது குருபக்தியை காட்டிய இடும்பனுக்கு அருளினார். பழனி இறைவனின் அருளால் மீண்டு எழுந்த இடும்பன் பெருமானின் திருவடிகளை கண்ணீருடன் தொழுது மன்னிப்பு வேண்டினான்.

பழனியில் காவல் பணி புரிதலையும் காவடி சுமந்து பெருமானை தரிசிக்க வரும் பக்தர்களின் வேண்டுதல் நிறைவேறுதலையும் இரு வரங்களாக வேண்டி நின்றான் இடும்பன். கருணைக் கடலான பழனி இறைவனும் இடும்பனுக்கு அருள் புரிந்து சிவ ஜோதியாய் பழனியில் வீற்றிருந்தார்.

அன்றுமுதல் இன்றுவரை பழனி முருகனுக்கு காவடி எடுக்கும் பழக்கம் இருந்து வருகின்றது.

kaavadi aattam

பங்குனி உத்தரத்தின் சிறப்புக்கள்

மகாலட்சுமி இந்நாளில் விரதம் இருந்து மகாவிஷ்ணுவின் திருமார்பில் இடம் பிடித்தாள்.

ஸ்ரீராமனுக்கும் சீதைக்கும் திருமணம் நடைபெற்ற நாள்.

பிரம்மன் தன் மனைவி சரஸ்வதியை நாக்கிலேயே வைத்துக் கொள்ளும்படியான வரத்தைப் பெற்றார்.

இந்திரன் தன் மனைவி இந்திராணியை பிரிந்திருந்து மீண்டும் அவளுடன் சேர்ந்த நாள்.

சந்திர பகவான் கார்த்திகை, ரோகிணி உள்ளிட்ட 27 நட்சத்திரங்களை மனைவியராக அடைந்த புண்ணிய தினம்.

பங்குனி உத்திரவிரதம் மேற்கொள்வோர் 48 ஆண்டுகள் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்று விரதநூல்களில் சொல்லப்பட்டுள்ளது. இவ்விரதத்தால் அடுத்தபிறவி தெய்வப்பிறவியாக அமையும். அதன் மூலம் ஜனன மரணச் சக்கரத்தில் இருந்து உயிர் விடுபட்டு முக்தி பெறும் என்பது ஐதீகம். சித்திரையில் சூரியன் தன் உச்சவீடான மேஷராசியில் சஞ்சரிப்பார். அந்த அடிப்படையில் பங்குனியிலேயே சூரியனின் கதிர்கள் தீவிரமடையத் தொடங்கிவிடும். உத்திர நட்சத்திரத்திற்குரிய கிரகம் சூரியன். இந்நாளில் செய்யும் வழிபாட்டினால் பாவங்கள் அனைத்தும் பஸ்பமாகிவிடும் என்று சூரியபுராணம் கூறுகிறது. பங்குனி உத்திரநாளில் சந்திரன் பலம்பெற்று கன்னிராசியிலும், சூரியன் மீனவீட்டிலும் இருக்கும். இவ்விரு கிரகங்களும் இந்நாளில் ஒருவரை ஒருவர் ஏழாம்பார்வையால் பார்த்துக் கொள்வர். இதன் மூலம் ஆத்ம பலமும், மனோபலமும் ஒருசேர நமக்குக் கிடைக்கிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg