Chrome Badge
Athavan Newsswitch to mobile site switch to desktop site

Weekly Specials

இலங்கையில் மீண்டும் மகிந்த யுகம்?!
அனைவருக்கம் வணக்கம்?, தென் இலங்கையில் அடுத்த ஜனாதிபதியாக யார் வரப்போகின்றார் என்பதே விவாதமாகியிருக்கின்றது. நிச்சயமாக தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போட்டியிட்டாலும் தெரிவு செய்யப்படமாட்டார் என்பதே தென் இலங்கையின் ஆய்வாளர்களின் கருத்தாக இருக்கின்றது. அதற்குக் ஜனாதிபதி மைத்திரிபால தேர்தலில் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பது முதலாவது காரணம். தேர்தலின்போது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாது செய்வதாகவும், தேர்தல் முறையில் மாற்றம் ஒன்றை புதிய அரசியலமைப்பு ஒன்றில் மூலமாக ஏற்படுத்துவதாகவும், தேசிய இனப்பிரச்சனைக்கு அரசியல் தீர்வைக்காண்பதாகவும் […]...
Read More...!

திருக்குறள்

பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்
அதிகாரம் - 4 குறள் - 44

பொருள் சேர்க்கும் பொது பழிக்கு அஞ்சிச் சேர்த்து, செலவு செய்யும் போது பகுந்து உண்பதை மேற்க்கொண்டால், அவ்வாழ்கையின் ஒழுங்கு எப்போதும் குறைவதில்லை.

மௌனத்துக்கு அனுமதியில்லை
எனக்கும் அவளுக்குமான
பயணங்களில்

பிரபஞ்சம் வியாபித்த என்னை
இறுக்கி அணைத்த உங்கள்
இடைவெளிகளிலிருந்து மட்டும்
பிரித்து விடாதீர்கள் என
காற்று எங்களிடம்
யாசகம் கேட்கிறது

கழற்றி வைக்கப்பட்ட
அவள் பாதணிகள்
பிரிவு துயர் தாளாமல்
காவு கொள் என்னை என
கடலிடம் யாசிக்கிறது

பளிங்கு பாதங்களை
அலை கழுவி போனதால்
கடலோடு முரண்பட்டு
ஆலய வாசல் யாசகர்களாய்
கரையேறி கிடக்கிடக்கின்றன- அவள்
பாதம் பட்ட மணல் துகள்கள்.

நீண்ட நேரம்
தீண்டப்படாமையால்
ஒருமுறையேனும் சிணுங்கு என
கை தொலைபேசியிடம்
யாசகம் கேட்கிறது- அவள்
ஸ்பரிசத்துக்காய் தவமிருக்கும்
என்னவளின் கைப்பை

காத்திருந்து களைத்துப்போன
அத்தனையும்; ஒருசேர
என்னை பார்க்கின்றன
எம்மையெல்லாம் புறந்தள்ளி
இத்தனை நாழியும்
கொஞ்சுகிறாயென
கோபத்தை உமிழ்கின்றன

பாவம் அவைக்கு
எப்படி தெரியும்
இவ்வளவு நேரம் அவளின்
ஒற்றை முத்தத்தை
வேண்டி யாசிக்கும் நானும்
அவர்களில் ஒருவன்தான் என

Read more...