Chrome Badge
Athavan Newsswitch to mobile site switch to desktop site

Weekly Special

போர் முடிந்து பத்து வருடங்களாகியும் வடக்கு கிழக்கின் மக்களின் வாழ்வு நிலை இன்னும் நத்தை வேகத்தில்தான் நகர்கின்றது

இலங்கையில் போர் முடிந்து கிட்டத்தட்ட பத்து வருடங்களாகியும் வடக்கு கிழக்கின் மக்களின் வாழ்வு நிலை இன்னும் நத்தை வேகத்தில்தான் நகர்கின்றது. கௌரவம் இல்லாத ஏழ்மை வாழ்வைத்தான் யுத்தத்துக்கு முகம் கொடுத்த சகல மக்களும் அனுபவிக்கின்றனர்.

அதிலும் பெண்களின் நிலையானது மிகவும் கவலைக்கிடமான நிலையிலேயே உள்ளது என்பதை நான் சொல்லத்தேவை இல்லை. வாழ்வாதாரம் இல்லாமை, பாதுக்காப்பான சமூக சூழல் இன்மை, நுண் கடன் தொல்லை, சமூகத்தில் உள்ள ஆண்களின் மது போதை வஸ்து பாவனை, பெண்களுக்கு எதிரான வன்முறை போன்றவை குறிப்பாக பெண்களை பாதிக்கும் காரணிகளாகும்.

இது இவ்வாறு இருக்க முவ்வின மக்களும் வாழும் திருகோணமலையில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் ஆடை சம்பந்தமான பிரச்சினையும் அதற்கான எதிர்வினைகளும் மீண்டும் முஸ்லிம் தமிழ் சமூகங்களினிடையே பிளவை ஏற்படுத்த எதுவாக அமையும். இப்போது எங்களுக்கு தேவை நிம்மதியான வன்முறை அற்ற வாழ்வு.

குறிப்பாக கிழக்கு மாகாணத்துக்கு மக்கள் பல தசாப்தங்களாக வெவ்வேறு கலவரங்களுக்கும் வன்முறைகளுக்கும் முகம் கொடுத்த மக்கள். 80 களிலிருந்து முஸ்லிம் தமிழ் கலவரங்கள் உருவாக்கப்பட்டு இரு இனங்களுக்கும் இடையே இன்று வரை விரிசல் பெரிதாகி கொண்டே போகின்றது.

இதற்கு முக்கிய காரணம் ஆரசியல் லாபம்பெற அரசியல்வாதிகளினதும் கட்சிகளினதும் அரசினதும்  செயல்பாடே. மாகாணசபை தேர்தல் அண்மிக்கும் இந்த காலப்பகுதியில் முஸ்லிமுக்கும் தமிழருக்குமிடையே  பிரிவினையை உருவாக்குவது அரசியல் முதலைகளுக்கு லாபம் தரும் செயல். இது இம்முறை இந்து இஸ்லாமியர் என்று  சேலையின் மூலமும் அபாயாவின் மூலம் வந்துள்ளது. அதற்கு பகடைக்காய்களாக்கப்பட்டவர்கள்  பெண்கள்.

இற்றை வரை நடந்த சகல வன்முறைகளும் முஸ்லிம் தமிழ் ஆண்களை கொன்றுகுவித்துள்ளது, ஆண்கள் காணமல் ஆக்கப்பட்டனர் கடத்தப்பட்டனர் சிறையில் அடைக்கபட்டனர்.

அனால் அவரைசர்ந்த குடும்பங்கள் பொருளாதார வசதிக்கு அல்லல் படும் நிலைக்கு தள்ளப்பட்டன. மீண்டும் வன்முறையை உருவாக்குவதன் மூலம் அல்லது அதற்கு துணைபோவதன் மூலம் மீண்டும் பெண்களை உங்கள் பிள்ளைகளை படுகுழியில் தள்ளாதீர்கள்.

ஒரு பெண் தனக்கு பிடித்த அவளின் கலாச்சார உடையை அணிய யாரும் தடை செய்யலாகாது. காலத்துக்கும் தேவைக்கும், இருக்கும் பணத்துக்கும்  ஏற்ற மாதிரி அவள் தன உடையை தெரிவு செய்யலாம். அது அவளின் விருப்பம். ஆடைக்கலாச்சாரம்  காலத்துக்கு காலம் மாறி வருகின்றது.

இப்போது தமிழ் பெண்கள் 80 வரை சாரியை தவிர குட்டை பாவாடை, பாவாடை சட்டை (கௌன் ) போட்ட காலம் இருந்தது. அதேபோல் இஸ்லாமிய பெண்களும் சேலையை அணிந்து முதலையால் தங்களின் தலையை மூடிக்கொண்டனர். 80 ,83  காலப்பகுதிகளில் பஞ்சாபி இனத்தவர் அணியும் பஞ்சாபி ஆடை முகம் தமிழர் மத்தியில் அறிமுகமானது, அதே நேரத்தில் மத்தியகிழக்கு வேலைவாய்ப்பை தேடி இலங்கையர் படை எடுத்தனர்.

இதில் முஸ்லிம் ஆண்களும் பெண்களும் அடங்குவர், அகவே புர்கா ஜிஜாப் போன்ற உடைகளுடன் பெண்களை காண முடிந்தது. அன்று தாவணி பாவாடை உடுத்த தமிழ் பெண்கள் இப்போது லேகங்கா எனும் உடையை அணிய ஆரம்பித்தார்கள், இதுபோல் திருமணத்துக்கு  வேட்டி  சட்டை தலைப்பாகை  கூறை சேலை  உடுத்த காலாசாரம் போய் ஆணும் பெண்ணும் வடக்கு இந்தியரை போல் ஆடை அணிகின்றனர். திருமணத்தின் போது அல்லது வரவேற்பு நிகழ்வுகளில் மட்டுமே ஆணின் உடை மாறுகின்றது.

ஆனால் சிங்கள தமிழ் முஸ்லிம் ஆண்கள் ஒரே மாதிரியான உடையைத்தான் அணிகின்றனர். உடையை வைத்து தமிழரா சிங்களவரா முஸ்லிமா என்று அடையாளம் காண்பது மிகக்கடினம். தனியார் துறையாயிருந்தால் என்ன அரச துறையாக இருந்தால் பாடசாலையாக இருந்தால் என்ன வணக்கஸ்தளங்கலாக இருந்தால் என்ன ஆண்கள் இந்த உடைதான் உடுத்த வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.

அவர்களுக்கு பாரம்பரியத்தை கலாச்சாரத்தை பேணும் பொறுப்பு கொடுக்கப்படவும் இல்லை. யாரும் ஆண்களை கேள்வி கேட்பதும் இல்லை. ஆனால் பெண்கள் என்றவுடன் எத்தனை கட்டுப்பாடுகள் வியாக்கியானங்கள் கேள்விகள்.

இங்கு இன்னும் ஒரு விடயத்தை ஞாபகப்படுத்தல் அவசியம் எந்த உடை அணிய வேண்டுமோ அல்லது அணியக்கூடாது என்று போராடுவதற்கு பதிலாக உங்கள்  போராட்டங்களை உங்கள் பாடசாலைக்குள் நடக்கும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு எதிரான போராட்டமாக மாற்றுங்கள்.

இலங்கையில் சகல மாவட்டங்களிலும் சகல மொழி பாடசாலைகளிலும் சிறுவரை பாலியல் துஷ்பிரயோகம் பண்ணுவது அதிகரித்து வருகிறது. இவைகள் அரங்கேறுவது ஆசிரியர்களாலும் அதிபர்களாலும்தான்.

உண்மையில் சகல இன பெண்களுக்கும் இருக்கும் பிரச்சனை ஆடை இல்லை. பாதுகாப்பாக வீட்டிலும் வெளியிலும் வாழக்கூடிய சூழல். வீதியில், பொதுப்போக்குவரத்தில் பகலில் சென்றாலென்ன இரவில் சென்றாலென்ன  கிண்டல்கள், கேலிகள் பாலியல் ரீதியான பின்னுட்டங்கள் , பாலியல் துஷ்பிரயோகங்கள், பாலியல் லஞ்சம் கோரல், பாலியல் சுரண்டல் வீட்டு வன்முறை போன்றவை நிறுத்தப்படவேண்டும் இவற்றிலிருந்து பெண்ணுக்கு விடுதலை வேண்டும்.

மேல்குறிப்பிட்ட குற்றங்களுக்கு உடை ஒரு காரணம்  இல்லை என்பதும் ஆண்கள்தான் மூல காரணம் என்பதை சமூகம் புரிந்து கொள்ள வேண்டும்.   அபாயா அணிந்தால் குற்றங்கள் குறையும் என்பதோ சாரி அணிந்தால் அது ஆபாச உடை என்பதோ உண்மை அல்ல.

ஆபாசம் என்பது பார்ப்பவரின் கண்ணை பொறுத்தது வாழும் நாட்டை பிராந்தியத்தை சூழலை பொறுத்தது. இலங்கையில் தமிழ் நாட்டில் ஆபாசமாக தெரிவது ஐரோப்பாவில் ஆபாசமாக தெரியாது. இலங்கையில் கொழும்பில் ஆபாசமாக தெரியாத ஆடை தமிழ் நாட்டில் ஆபாசமாக தெரியும்.

மதத்தை காப்பாற்ற போய் மனிதர்களை  நாம் இழந்துவிடலாகாது. பாரம்பரியத்தை காக்கின்றோம் என்று சொல்லி பரம்பரையை இழந்து விடலாகாது.

நளினி ரட்ணராஜா மனித உரிமை செயற்பாட்டாளர்

சமூகம்

போர் முடிந்து பத்து வருடங்களாகியும் வடக்கு கிழக்கின் மக்களின் வாழ்வு நிலை இன்னும் நத்தை வேகத்தில்தான் நகர்கின்றது

போர் முடிந்து பத்து வருடங்களாகியும் வடக்கு கிழக்கின் மக்களின் வாழ்வு நிலை இன்னும் நத்தை வேகத்தில்தான் நகர்கின்றது

இலங்கை, இந்தியா மற்றும் தெற்காசிய நாடுகளில் தொடர்ந்தும் பாலியல் வன்முறைகள்!

பெண்களுக்கு எதிரான வன்முறை – மனித குலத்திற்கே ஏற்பட்ட பாதிப்பு

தேசியவாதம் பெண்களுக்கு எதிரான வன்முறையே

சர்வதேச குற்றவியல் நீதி மன்றமும் அனைத்துலக நியாயாதிக்க முறையும்