Chrome Badge
Athavan Newsswitch to mobile site switch to desktop site

கிரென்பெல் டவர் தீ விபத்து: உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிப்பு

In
Published: 06:43 GMT, Jun 18, 2017 |
0 Comments
1290
This post was written by : Elakkiya

மேற்கு லண்டன் கிரென்பெல் டவர் தீ விபத்தில் குறைந்தது 58 பேர் உயிரிழந்திருக்கலாம் பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

பாரியளவில் உயிர் சேதத்தையும் சொத்து தேசத்தையும் ஏற்படுத்திய மேற்படி தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை உறுதிப்படுத்த முடியவில்லை எனினும், தீ விபத்தில் சிக்கியவர்கள் உயிர்பிழைத்திருப்பதற்கு வாய்ப்பில்லையென தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்து கருத்து தெரிவித்த பெருநகர பொலிஸ் தளபதி, “சம்பவத்தில் உயிரிழந்த 23 வயதுடைய மொஹமட் அல்ஹாஜலி என்பவரை அடையாளம் கண்டுள்ளோம். துரதிஷ்டவசமாக சம்பவத்தில் உயிரிழந்து அடையாளம் காணப்பட்ட முதல் நபர் இவராவார். மேலும், தீ விபத்து ஏற்பட்ட போது கட்டடத் தொகுதியில் இருந்ததாக கூறப்படும் 58 பேர் உயிரிழந்துவிட்டதாக கருதப்படுகின்றனர். இதனையிட்டு நான் கவலை அடைகின்றேன்.

கிரென்பெல் டவர் கட்டடத்தில் மீட்புப் படையினர் தொடர்ந்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் நிறைவு பெறுவதற்கு குறிப்பிடத்தக்க நாட்கள் தேவை. படிப்படியான விரிவான தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன” என்று தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உறுதிப்படுத்தப்படுமாயின் அது இரண்டாம் உலகப்போரின் பின்னர் லண்டனில் ஏற்பட்ட பாரிய அழிவாக கருதப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)