Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

வடகொரியா மீது புதிய பொருளாதாரத் தடை

In உலகம்
Published: 04:16 GMT, Sep 12, 2017 |
0 Comments
1232
icon_com
This post was written by : Suganthini

வடகொரியா அண்மையில் நடத்திய பாரிய அணுவாயுதப் பரிசோதனையைத் தொடர்ந்து, அந்நாடு மீது புதிய பொருளாதாரத் தடையை ஐக்கிய நாடுகள் சபை விதித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் கூட்டம், நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்றது. இதன்போது, இந்தப் பொருளாதாரத் தடை தொடர்பில் வாக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையில், புதிய பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், வடகொரியா மீதான புதிய பொருளாதாரத் தடையை விதிக்கும் வாக்கெடுப்பில், ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகளும் கலந்துகொண்டு ஆதரவளித்துள்ளன.

இதற்கிடையில், வடகொரியா மீதான பொருளாதாரத் தடை தொடர்பில் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபைக்கு வரைவுத் தீர்மானமொன்றை கடந்த வாரம் அமெரிக்கா முன்வைத்திருந்தது.

வடகொரியா மீதான எண்ணெய்த் தடை, வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன்னின் சொத்து முடக்கம், ஆடை வகைகளுக்குத் தடை மற்றும் வெளிநாடுகளிலுள்ள வடகொரியத் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கத் தடை ஆகியவை அத்தீர்மானத்தில் உள்ளடக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், எண்ணெய் இறக்குமதிக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள அதேவேளை, ஆடை வகைகளின் ஏற்றுமதிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் வடகொரியர்கள் வேலை செய்வதை தடை செய்வதைத் தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன்னின் சொத்து முடக்கம் மற்றும் பயணத் தடை ஆகியன கைவிடப்பட்டுள்ளன.

இந்த வாக்கெடுப்பைத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்கத் தூதுவர் நிக்கி ஹலே, ‘நாங்கள் ஒருபோதும் யுத்தத்தை விரும்பவில்லை என்பதுடன், வடகொரியா மீதான இந்தப் பொருளாதாரத் தடை தொடர்பிலும் நாங்கள் மகிழ்ச்சி அடையவில்லை. அணுவாயுதத் திட்டத்தை வடகொரியா கைவிடுவதற்கு ஒத்துக்கொண்டால், இந்த பொருளாதாரத் தடைகளை மீளப் பெற்றுக்கொள்ள முடியும்’ என்றார்.

தனது ஆறாவது அணுவாயுதப் பரிசோதனையை கடந்த மூன்றாம் திகதி வடகொரியா நடத்தியிருந்தது. இதன்போது, ஹைட்ரஜன் எனப்படும் வெடிகுண்டுப் பரிசோதனையை வடகொரியா நடத்தியிருந்தது.

இந்த அணுவாயுதப் பரிசோதனை வெற்றிகரமாக அமைந்திருந்ததாக வடகொரியா அறிவித்திருந்தது.

இது இவ்வாறிருக்க, ஏவுகணைப் பரிசோதனைகளையும் வடகொரியா நடத்தியிருந்தன.

வடகொரியாவின் இவ்வாறான செயற்பாடுகளால், கொரிய தீபகற்பத்திலும் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ள அதேவேளை, வடகொரியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் முறுகல் நிலைமையும் அதிகரித்துக் காணப்படுகின்றன.

வடகொரியாவின் ஏவுகணைப் பரிசோதனைக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், அந்த இரு நாடுகளுக்கும் இடையில் சூடான வாக்குவாதங்களும் இடம்பெற்றிருந்தன.

இந்நிலையில், அமெரிக்காவின் பசுபிக் பிராந்தியமான குவாம் மீது ஜப்பானைக் கடந்து சென்று ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்படும் என்றும் வடகொரியா எச்சரித்திருந்தது.

மேலும் வடகொரியாவின் அணுவாயுதம் மற்றும் ஏவுகணைப் பரிசோதனைகளுக்கு தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளும் தமது கண்டனங்களை வெளியிட்டு வந்திருந்தன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)