Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிறந்த பிரெக்சிற் ஒப்பந்தம் எட்டப்படுமென நிதியமைச்சர் நம்பிக்கை

In
Updated: 10:16 GMT, Dec 6, 2017 | Published: 10:16 GMT, Dec 6, 2017 |
0 Comments
1185
This post was written by : Suganthini

எதிர்வரும் பிரெக்சிற் பேச்சுவார்த்தையின்போது, பிரித்தானியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் சிறந்த ஒப்பந்தத்தை எட்டுமென, பிரித்தானிய நிதியமைச்சர் பிலிப் ஹேமண்ட் தெரிவித்துள்ளார்.

பிரஸ்ஸல்ஸில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற கூட்டத்தின்போதே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்தபோது, ‘பிரித்தானியாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்குமிடையில் பிரெக்சிற் பேச்சுவார்த்தை இந்த வாரம் நடைபெறவுள்ளது. இதன்போது, பிரெக்சிற் விவகாரம் தொடர்பாக சிறந்த ஒப்பந்தம் எட்டப்படுவதற்கான சாத்தியக்கூறு காணப்படுகின்றது’ என்றார்.

மேலும், ‘சிறந்த பிரெக்சிற் ஒப்பந்தம் எட்டப்படுமென்பதில், நாம் மிகவும் நம்பிக்கையாகவுள்ளோம்’ எனவும் அவர் கூறியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg