பரிஸ் சொக்கலேட் ஃபெயார் ஆரம்பம்!
In ஐரோப்பா October 31, 2018 5:23 am GMT 0 Comments 1537 by : Farwin Hanaa
உலகின் மிகப் பெரிய சொக்கலேட் கொண்டாட்டமாகக் கருதப்படும் விழாவான சொக்கலேட் ஃபெயார் ஜேர்மனியின் தலைநகர் பரிஸில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சொக்கலேட் வகைகளைக் கொண்டு விதவிதமாக வடிவமைக்கப்பட்ட ஆடைகளை அணிந்த ஃபெஷன் அணிவகுப்புக்களுடன் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு பரிஸ் சொக்கலேட் ஃபெயார் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஐந்து நாள் நிகழ்வாக இடம்பெறும் குறித்த கொண்டாட்டத்தின் நேற்றைய முதல் நாள் நிகழ்வை பார்வையிடுவதற்காக 1000 இற்கும் மேற்பட்ட மக்கள் கூட்டம் கூடியிருந்தது.
அணிவகுப்பு நிகழ்வில் பங்குகொண்ட மோடல்களுடன் பிரான்ஸ் காற்பந்து விளையாட்டு வீரர் ஜிப்ரில் சிசியும் இவ்வருட பிரான்ஸ் நாட்டு அழகி மயிவா கவுசேவும் இணைந்து நிகழ்வை மேலும் சிறப்பித்துள்ளனர்.
பிரான்ஸின் பாரம்பரிய கலாசாரத்தில் மிகவும் முக்கியமாக சொக்கலேட் கருதப்படுவதை நிரூபிக்கும் முகமாகவே பரிஸ் சொக்கலேட் ஃபெயார் கொண்டாடப்படுவதாக நிகழ்வின் இணை-ஏற்பாட்டாளர் சில்வி டவுஸ் தெரிவித்துள்ளார்.
500 இற்கும் மேற்பட்ட வகைச் சொக்கலேட்டுக்களைப் காட்சிக்காக வைக்கவுள்ள குறித்த கொண்டாட்டத் தொடர் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.