TPP-11 நாடுகளுக்கான வர்த்தக ஒப்பந்தம் விரைவில் அமுல்படுத்தப்படும்! – ஜப்பான்
In ஆசியா October 31, 2018 4:20 am GMT 0 Comments 1651 by : Farwin Hanaa
11 பசுபிக் நாடுகள் ஒன்றிணைந்த வர்த்தகத் திட்டத்தை எதிர்வரும் மாதம் முன்னெடுக்கவிருப்பதாக ஜப்பானிய பொருளாதார அமைச்சர் டொஷிமிட்சு மொடெகி தெரிவித்துள்ளார்.
பொருளாதாரத்தில் விரைவான முன்னேற்றத்தைக் கண்டுவரும் ஆசிய பசுபிக் நாடுகள் சிலவும் அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, கனடா, மெக்சிகோ, ஜப்பான், சிங்கப்பூர் ஆகிய Trans-Pacific Partnership (TPP) நாடுகள் ஒன்றிணைந்து சுங்கவரியற்ற வர்த்தக நடவடிக்கையை மேற்கொள்ளும் திட்டத்தை வெற்றிகரமாக அமுல்படுத்த எண்ணுவதாக ஜப்பானிய பொருளாதார அமைச்சர் இன்று (புதன்கிழமை) தெரிவித்துள்ளார்.
மேலும், குறித்த திட்டத்தை எதிர்வரும் டிசம்பர் மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் வெற்றிகரமாக அமுல்படுத்த திட்டமிட்டுள்ளதாக மொடெகி ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
ஜப்பானின் தலைமையில் இடம்பெறும் பசுபிக் நாடுகளுக்கான குறித்த அமைப்பின் வர்த்தக உடன்படிக்கையானது, இணக்கப்பாடுடைய முற்போக்கு ஒப்பந்தம் என அழைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.